நடிகையை மருமகளாக எங்க வீட்டில் ஏற்கமாட்டோம்.. பொண்டாட்டி நடிகைன்னு மறந்து கறாராக பேசிய ராமராஜன்.!

நடிகர் ராமராஜன் 90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்தவர். ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஒரு பக்கம் மாஸாக நடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்திலேயே கிராமிய கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து அவர்களுக்கு இணையாக வெற்றி விழா நாயகனாக வலம் வந்தவர் இவர். மக்கள் திலகம் எம்ஜிஆரின் ரசிகர்கள் மொத்த பேரும் ராமராஜனுக்கு ஆதரவு கொடுக்கும் அளவிற்கு இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தார்.

புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் தான் ராமராஜன் நடிகை நளினி மீது காதல் வயப்பட்டு அவரிடம் தன் காதலை தெரிவித்தார். நளினியின் வீட்டில் யாரும் இந்த காதலுக்கு அனுமதி வழங்காத நிலையில் வீட்டை எதிர்த்து தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருடைய திருமணமும் அப்போது கோலிவுட்டில் ரொம்பவும் பரபரப்பாகவே பேசப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு நளினி சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கி தான் இருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. மற்ற சினிமா பிரபலங்களை போல் விவாகரத்துக்கு பிறகு ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இன்றுவரை எந்த ஒரு பேட்டியிலும் இருவருமே அவர்களுக்குள்ளான உறவை ரொம்பவும் மரியாதையாக பேசுவார்கள்.

நடிகையான நளினியை துரத்தி துரத்தி காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்த ராமராஜன் தன் மனைவி ஒரு நடிகை என்பதை பின் நாட்களில் மறந்து ஒரு நடிகையிடம் எங்கள் வீட்டில் சினிமாவில் நடிப்பவர்களை எல்லாம் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது எல்லாம் எங்களுக்கு செட்டாகாது என்று சொல்லி ஒரு காதலையே பிரித்திருக்கிறார். இந்த விஷயம் பல வருடங்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது.

90 களின் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் பானுப்பிரியா. இவர் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்திலேயே அவருடைய தங்கை சாந்திப்ரியாவும் அக்காவை போல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நடிக்க வந்தார். ஆரம்ப காலத்தில் பானுப்பிரியாவுக்கு அவருடைய தங்கை சினிமாவிற்கு வருவது பிடிக்கவில்லை. சாந்திப்ரியா நடிகர் ராமராஜனுடன் இணைந்து எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடித்தார்.

அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு அடிக்கடி வந்து போகும் ராமராஜனின் உறவினர் ஒருவரோடு சாந்தி பிரியாவிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதை அறிந்த பானுப்ரியா ராமராஜனிடம் இருவரது திருமணத்தை பற்றி பேசும்பொழுது, எங்கள் குடும்பத்திற்கு ஒரு சினிமா நடிகை மருமகளாக வருவது என்பது நடக்காது, நான் நளினியை திருமணம் செய்ததே தெரியாமல் நடந்த ஒரு விஷயம் என்று சொல்லி மறுத்துவிட்டாராம். ஒரு நடிகையை உருகி உருகி காதலித்து திருமணம் செய்த இவர் இன்னொரு நடிகையின் காதலை பிரித்த விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.