சினிமாவைப் பொறுத்தவரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சி செய்ய தவறினால் எந்த நேரமும் தங்களுடைய நிலைமை பரிதாபத்திற்கு சென்றுவிடும் என்பது ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
அழகாக இருக்கும் அனைவருமே சினிமாவில் ஜெயித்துவிட முடியாது. ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களது கதி அதோகதிதான்.
அப்படி தமிழ் 2019 ஆம் ஆண்டு எம்பிரான் என்ற படத்தை நம்பி வீணாப்போன நடிகைதான் ராதிகா. இளம் நடிகையான இவர் கன்னட சினிமாவிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் ஏமாற்றம்.
எந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தரவில்லை. இதனால் தடுமாறிக் கொண்டிருந்த ராதிகாவுக்கு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பூவே உனக்காக சீரியலில் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

தற்சமயம் சினிமாவிலிருந்து சீரியலுக்கு வருபவர்களை விட சீரியலில் இருந்து சினிமாவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை நம்பி களம் இறங்கியுள்ளார்.
கண்டிப்பாக வருங்காலத்தில் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போல தாமும் சினிமாவில் ஒரு நல்ல நிலைமையை அடைந்து விடுவோம் என பெரிதும் நம்பி கொண்டிருக்கிறாராம் நடிகை ராதிகா.
