சிங்கப்பெண்ணில் மித்ராவை நெருங்கும் ஆனந்தி.. சமயம் பார்த்து துளசியிடம் சரண்டர் ஆகும் அன்புவின் அம்மா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தன்னுடைய பிரச்சினைக்கு மகேஷ் ஒருவனால் தான் தீர்வு சொல்ல முடியும் என ஆனந்தி அவனிடம் உதவி கேட்கிறாள்.

கம்பெனியின் 25வது ஆண்டு விழா கொண்டாட்ட வீடியோ தன்னிடம் இல்லை என்று முதலில் மகேஷ் சொல்கிறான்.

மித்ராவை நெருங்கும் ஆனந்தி

பின்னர் லேப்டாப்பில் சேவ் பண்ணி வைத்திருப்பது தெரிந்து அதை ஆனந்தியிடம் கொடுத்த ஹாஸ்டலுக்கு வருகிறான்.

அதே நேரத்தில் மித்ரா மகேஷ் பென் டிரைவை ஆனந்தியிடம் கொடுப்பதை பார்த்து விடுகிறான். அன்பு மற்றும் ஆனந்திக்கு அடுத்தடுத்து பிரச்சனை வருவதால் அன்புவின் அம்மா லலிதா ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணுகிறார்.

அந்த பூஜையில் ஆனந்தி கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு விட்டு தான் ஏற்கனவே சென்றிருப்பார். அதைவிட பெரிய பிரச்சினையாக தன் குழந்தைக்கு அப்பா யார் என்பதை கண்டுபிடிக்க ஆனந்தி தீவிரம் காட்டி வருகிறாள்.

இதனால் பென் டிரைவ் கிடைத்ததும் தோழிகளுடன் சேர்ந்து அதை லேப்டாப்பில் போட்டு பார்க்க தயாராகிறாள்.

அதே நேரத்தில் அன்புவின் மொத்த குடும்பமும் பூஜைக்கு ஆனந்தி வருவதற்காக காத்து கிடக்கிறார்கள். கண்டிப்பாக ஆனந்தி அந்த பூஜைக்கு போகப் போவது கிடையாது.

இதனால் அன்பு பக்கம் ஆனந்தி மீது மனக்கசப்பு ஏற்படுகிறது அதே நேரத்தில் அன்புவின் அம்மா லலிதாவும் ஆனந்தியின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைகிறார்.

இந்த சமயம் பார்த்து தான் துளசி அன்புவின் வீட்டிற்கு ஹென்றி கொடுக்க இருக்கிறாள்.

ஏற்கனவே ஆனந்தி மீது மனக்கசப்பில் இருக்கும் அன்புவின் அம்மா மொத்தமாக துளசியிடம் சரண்டர் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. துளசியின் என்று விரைவில் இருக்கும் சிங்க பெண்ணில் சமீபத்தில் உறுதியாகி இருக்கிறது.