சிங்கப்பெண்ணில் மகேஷ் உடன் கை கோர்க்கும் ஆனந்தி.. அன்பு கையில் சிக்கும் சாட்சி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கடந்த 2 எபிசோடுகள் முழுக்க ஆனந்தி, அன்புவை விட்டு விலகுவது, அன்பு அதை நினைத்து கஷ்டப்படுவதுமாக இருந்தது.

இதை தாண்டி நேற்று ஆனந்தியிடம் சௌந்தர்யா பேசிய விஷயம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல பாராட்டையும் பெற்று இருக்கிறது.

அன்பு கையில் சிக்கும் சாட்சி!

உண்மையை சொல்ல போனால் ஆனந்தியின் தோழிகள் ரெஜினா மற்றும் காயத்ரி இந்த பிரச்சனையில் எடுத்த முடிவை விட சௌந்தர்யா நல்ல முடிவை சொல்லி இருக்கிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் . மித்ரா கொடுத்த உலர்ந்த பழங்களை ஆனந்தியிடம் கொடுக்கிறான்.

மேலும் அன்புவை அழைத்து அதை ஆனந்திக்கு ஊட்டி விட சொல்கிறான். இது அன்புவுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அதே நேரத்தில் மித்ராவுக்கு இந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துகிறது. மகேஷ் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என முழுக்க முழுக்க நம்புவதால் இப்படி செய்கிறான்.

அதே நேரத்தில் சௌந்தர்யாவும் மகேஷிடம் என்ன பிரச்சனை என்று சொல்லி அவனிடம் உதவி கேட்க சொல்கிறாள். ஆனந்தியும் மகேஷிடம் உதவி கேட்க திட்டமிட்டு இருப்பது போல் காட்டப்படுகிறது.

ஒரு வேளை இதற்காக ஆனந்தி மகேஷிடம் உதவி கேட்டு, அவனுடைய உதவியுடன் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம் சௌந்தர்யா மூலம் அன்பு, ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.