Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆனந்தியும், அன்புவும் எப்படியாவது ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்று இவ்வளவு நாள் நேயர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.
தற்போது நிலைமை தலைகீழாக மாறி ஆனந்தி கர்ப்பமாக இருப்பது அன்புவுக்கு தெரிஞ்சா மட்டும் போதும் என்று ஆகி விட்டது.
குற்றவாளியை நெருங்கிய ஆனந்தி
ஆனந்தி எதற்காக தன்னிடம் சரியாக பேசுவது இல்லை என்ற கேள்வியே அன்புவை உறுத்தி கொண்டிருக்கிறது.
போதாத குறைக்கு அன்புவின் அம்மா லலிதா ஆனந்தியை வீட்டுக்கு அழைத்து வரும் படி சொல்கிறார். ஆனந்தி அன்பு வீட்டுக்கு போவதற்கே குற்ற உணர்ச்சியில் தட்டு தடுமாறுகிறாள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி இடம் கம்பெனியில் கருணாகரன் வீணாக வாய் கொடுப்பது போல் தெரிகிறது.
ஆனந்தி எப்போதும் இல்லாத அளவுக்கு கருணாகரன் மீது மூர்க்கத்தனமான கோபம் அடைகிறாள்.
இதன் மூலம் கம்பெனி பார்ட்டியின் போது தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு கருணாகரனும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவளுக்கு சந்தேகம் வந்ததாக தெரிகிறது.
கருணாகரன் மூலம் தன்னுடைய இந்த நிலைமைக்கு மித்ரா தான் காரணம் என தெரிந்து கொள்கிறாளா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.