Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயம் தான் ஆனந்திக்கு நடந்திருக்கிறது.
பார்ட்டியில் தனக்கு ரகு என்பவன் தான் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கிறான் என்ற பெரிய ஆதாரத்தை ஆனந்தி கண்டுபிடித்தாள்.
கோபம் அவள் கண்ணை மறைத்ததால் ரகுவை தவறவிட்டு விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் ஆனந்தி இடமிருந்து தப்பிய ரகு மித்ராவிடம் தஞ்சம் அடைந்து விட்டான்.
இனிதான் ஆட்டமே ஆரம்பம்!
இனி ரகு வெளியில் வருவது என்பது நடக்காத விஷயம். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்பு வீட்டிற்கு செல்வது போல் காட்டப்படுகிறது.
பூஜைக்கு வராததால் அன்புவின் தங்கை யாழினி அன்புவின் அம்மா லலிதா ஆனந்தி மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள்.
இந்த சமயத்தில் வீட்டிற்கு வரும் ஆனந்தியிடம் யாழினி ரொம்ப வெறுப்பாக பேசுகிறாள். அந்த இடத்திற்கு அன்பு வருவது போல் காட்டப்படுகிறது.
கண்டிப்பாக ஆனந்தி அன்பு விடம் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனந்தி தனக்கு நடந்த பிரச்சனையை எல்லாம் சரி கட்ட முயற்சி செய்யும்போது அவளை தைரியமாக பாதுகாத்து அவளுடைய முயற்சியில் வெற்றி பெற செய்தவன் அன்பு.
அவன் இருந்திருந்தால் கண்டிப்பாக தப்பித்து இருக்க முடியாது. இனி ஆனந்தி தான் கர்ப்பமாக இருப்பதை அன்பு விடம் சொல்லி உதவி கேட்டால் மட்டும் தான் குற்றவாளி யார் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியும். அன்பு களத்தில் இறங்கி குற்றவாளியை கண்டுபிடிக்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.