சிங்கப்பெண்ணில் மௌனம் கலைக்கும் ஆனந்தி.. நிலை குலைய போகும் அழகப்பனின் குடும்பம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாய் இருப்பதை உறுதி செய்த டாக்டர் மேலும் இன்னொரு குண்டையும் தூக்கி போடுகிறார்.

உன்னை பார்த்தால் அப்பாவி பெண் போல் இருக்கிறது கண்டிப்பாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி அந்த அன்பு உன்னை ஏமாற்றி இருக்க வேண்டும்.

அவனை நேரில் அழைத்து வா நான் பேச வேண்டும் என்று சொல்கிறார். உடனே ஆனந்திக்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது.

மௌனம் கலைக்கும் ஆனந்தி

இதுவரையிலும் அன்புவின் மூச்சுக்காற்று கூட என் மீது பட்டது கிடையாது என சிங்கம் போல கர்ஜிக்கிறாள். மருத்துவமனையில் இருந்து அவசரமாக வெளியேறும் ஆனந்தி கோவிலுக்கு செல்கிறாள்.

அந்த சமயத்தில் ஆனந்தியின் அம்மா பேச்சு அவளுக்கு போன் செய்கிறார். அவரும் மருத்துவமனைக்கு போனியே என்ன சொன்னாங்க என்று கேட்கிறார்.

ஆனந்தி அவளுடைய அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்வது போல் காட்டப்படுகிறது. ஆனந்தி உண்மையை சொன்னாளா அல்லது ஏதாவது சமாளிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment