Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அன்புவை கொலை செய்துவிட்டு அந்த பழியை மகேஷ் மீது போடவேண்டும் என அரவிந்த் திட்டம் போட்டு இருந்தான்.
ஆனால் அரவிந்த் ஏவிய கூலிப்படையால் அன்புவை எதுவுமே செய்ய முடியவில்லை. மேலும் அன்பு வின் ஹீரோயிசம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
சம்பவம் செய்ய போகும் அன்பு-ஆனந்தி
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் கருணாகரன் மற்றும் மித்ரா ஆனந்திக்கு கம்பெனியில் தொந்தரவு கொடுப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
போட்டியில் ஜெயித்து ஆனந்தி டைலர் ஆகி முதல் மாத சம்பளம் வாங்க இருக்கிறாள். ஆனால் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் அவள் அதற்கு முன் செய்து கொண்டிருந்த வேலைக்கான சம்பளத்தை கொடுக்கிறார்கள்.
இது பற்றி கருணாகரனிடம் கேட்கும் பொழுது மூன்று மாதம் கழித்து தான் சம்பளம் ஏற்ற முடியும் என்று சொல்கிறார்.
இதனால் கோபப்பட்ட அன்பு ஆனந்தி மற்றும் கம்பெனியில் இருப்பவர்களை அழைத்துக் கொண்டு வந்து போராட்டம் செய்கிறான்.
உடனே கருணாகரன் மற்றும் மித்ரா இருவரும் மகேஷிடம் ஆனந்திக்கு சம்பள உயர்வு கேட்டு அன்பு போராட்டம் நடத்துகிறான் என்று சொல்கிறார்கள்.
இது மகேஷுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நல்ல முதலாளியாக ஆனந்திக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கிறானா அல்லது அன்பு மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.