சிங்கப்பெண்ணில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டும் அன்பு.. கோகிலா கல்யாணத்தில் நடக்க போகும் களேபரம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டுவானா அல்லது கடைசியாக தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வானா என்று தான் ரசிகர்களுக்கு பெரிய சந்தேகம் இருந்தது.

அதற்கு பதிலாக தான் இந்த ப்ரோமோ வீடியோ வந்திருக்கிறது. ஆனந்தி மீது எனக்கு உரிமை இருக்கிறது, அந்த உரிமையில் தான் அவளின் சம்மதம் இல்லாமலேயே இந்த தாலியை அவள் கழுத்தில் கட்டப் போகிறேன் என அன்பு முடிவெடுக்கிறான்.

தாலி கட்டும் அன்பு

கோகிலாவின் திருமணத்திற்காக மொத்த குடும்பமும் கோலாகலமாக மண்டபத்தில் கூடுகிறது. அதே நேரத்தில் அன்புவின் அம்மா கொடுத்த தாலி தொலைந்து விட்டதாக துளசியின் அம்மா லலிதாவிடம் சொல்கிறார்.

எப்படியோ லலிதாவுக்கு அன்பு வீட்டில் இல்லாததால் அந்த தாலியை அவன் எடுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வரப்போகிறது. கோகிலாவின் திருமணம் என்பது அழகப்பன் குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவு.

ஒரு வேளை இப்படி ஒரு இடத்தில் ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டி அவளுடைய குடும்பத்தை தலை குனிய வைக்க வேண்டாம் என அன்பு முடிவெடுக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

இருந்தாலும் கதை நகர்வை வைத்து பார்க்கும் போது ஆனந்தியின் சம்மதம் இல்லாமல் அன்பு அவளுடைய கழுத்தில் தாலி கட்டவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த கலவரங்கள் எல்லாம் இந்த வாரத்தில் நடந்து முடிகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.