ஆனந்தியின் ஆடு புலி ஆட்டத்துக்கு முடிவு கட்ட போகும் அன்பு.. மர்மம் உடையும் தருணத்தில் சிங்கப்பெண்ணே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இவ்வளவு நாளாக தன்னுடைய பிரச்சனை பற்றி அன்பு விடம் எதுவுமே சொல்லாமல் ஆனந்தி மறைத்து வருகிறாள்.

தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து எப்படியாவது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறாள்.

ஆனந்தியின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட போகும் அன்பு

அதே நேரத்தில் ஆனந்தி கவலையுடன் இருப்பது, தன்னிடம் பேசாமல் இருப்பது என எல்லாமே அன்புவுக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆனந்தி இடம் விசாரித்தாலும் இது குறித்து எந்த ஒரு விஷயமும் அவள் சொல்வதாய் இல்லை. இதனால் அன்பு துணிந்து வேறொரு முடிவை எடுத்து இருக்கிறான்.

இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியுடன் தங்கி அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ள சௌந்தர்யாவை அனுப்புகிறான்.

சௌந்தர்யா இனி ஹாஸ்டலில் ஆனந்தியுடன் தான் நான் தங்கப் போகிறேன் என்று சொல்லி வருகிறாள். இது ஆனந்திக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.

சௌந்தர்யா மூலம் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அன்பு தெரிந்து கொள்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.