Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி தனக்கு நடந்த விஷயத்தை அன்பு விடம் சொல்லாமல் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு நாடகம் ஆடி வந்தாள்.
ஆனால் ஆனந்தியின் மொத்த குட்டும் வெளியில் வர போகிறது. ஆனந்தி தன்னிடம் பெரிய விஷயம் எதையோ மறைக்கிறாள் என தெரிந்து கொண்ட அன்பு சௌந்தர்யாவே ஹாஸ்டலுக்கு அனுப்பி நோட்டமிடுகிறான்.
இதில் ஆனந்திக்கு எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரையை சௌந்தர்யா பார்த்து விடுகிறாள். இதை அன்புவிடம் சொல்ல அன்பு ஆனந்திக்கு போன் செய்து இது பற்றி பேசுகிறான்.
மொத்தமாய் ஆப்பு வைத்த அன்பு
மேலும் உன்னுடன் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது நாளை நாம் மருத்துவமனைக்கு போகலாம் என்று உறுதியாக சொல்கிறான்.
மேலும் ஆனந்தி முன்னமே பரிசோதனை செய்த மருத்துவமனைக்கு போனார்கள் என்றால் கண்டிப்பாக ஆனந்தியை பார்த்ததும் அந்த மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதை சொல்லிவிடுவார்.
இது அன்புக்கு பேரதிர்ச்சியாக அமையும். அதே நேரத்தில் ஆனந்தியின் கர்ப்பத்தை பற்றி தெரிந்து கொண்ட பின்பு அன்பு என்ன முடிவெடுக்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.