வேட்டையை தொடங்கிய அன்பு, ஆடி போன மித்ரா.. பரபரப்பான நகர்வில் சிங்கப்பெண்ணே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி தன்னுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை அன்பு விடம் சொல்லி, அன்பு அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களுக்கு இருந்தது.

இதை பல தடைகளை தாண்டி நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர். ஊரில் பட்ட அசிங்கத்தை போக்க இதற்கு காரணமானவனை கண்டுபிடித்தே தீருவேன் என சென்னைக்கு வந்த ஆனந்திக்கு அன்பு உறுதுணையாக இருக்கிறான்.

பரபரப்பான நகர்வில் சிங்கப்பெண்ணே!

மேலும் அந்த பார்ட்டியில் தான் ஆனந்திக்கு இது நடந்திருக்க வேண்டும், இதற்கு ரகு தான் காரணம் என்பதை அன்பு தெரிந்து கொள்கிறான். அன்பு, ஆனந்தி, முத்து, ஜெயந்தி நான்கு பேரும் ரகுவை தேடி போகிறார்கள். அதே நேரத்தில் இவர்களை பாலோ செய்து கொண்டு மித்ரா வருகிறாள்.

இது அன்புக்கு சந்தேகத்தை கொடுக்க, ஆனந்தி இல்லை இல்லை சமீப காலமாக மித்ரா எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்து பேசுகிறாள் என்று சொல்கிறாள். உடனே ஜெயந்தி இவ்வளவு நாள் உன்னை அழிக்க நினைத்தவள் திடீரென ஆதரவு கொடுப்பதுதான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது என்று சொல்கிறாள்.

அதே நேரத்தில் இந்த ப்ரோமோவில் அன்பு ரகுவின் நண்பனை தேடிச் சென்று அவனை அடித்து உதைத்து ரகு எங்கே என கேட்கிறான். அன்பு மட்டும் ரகுவை கண்டுபிடித்து விட்டால் இந்த சதியில் மித்ராவுக்கு தான் பெரிய பங்கு இருக்கிறது என்பதை தெரிந்து விடும். இதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.