SIngapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பது யாருக்குத் தெரியக்கூடாதோ அந்த மித்ராவுக்கே தெரிந்து விட்டது.
ஆனால் அதிலும் ஒரு நல்லது தான் நடந்திருக்கிறது என்று சொல்லலாம். குழந்தையின் அப்பா யார் என்று பரிதவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கான உண்மை மித்ராவுக்கு மட்டும்தான் தெரியும்.
ஆனந்தியின் கர்ப்பத்தை தெரிந்து கொள்ளும் வாணி
மேலும் அப்பா அம்மா மற்றும் அன்பு வை ஏமாற்ற மனம் இல்லாத ஆனந்தி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறாள்.
கடைசியாக எல்லோரையும் சந்தித்து விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என ஆனந்தி முடிவெடுக்கிறாள்.
நேத்து அண்ணன் வேலுவை சந்திக்க சென்ற ஆனந்தியின் பேச்சு அவளுடைய அண்ணி வாணிக்கு சந்தேகத்தை வரவைத்து விட்டது.
அதே நேரத்தில் இன்றைய புரோமோ வில் அன்புவை நேரில் பார்க்க வேண்டும் என ஆனந்தி போன் செய்து கூப்பிடுகிறாள்.
அன்புவையும் சந்தித்து விட்டு தற்கொலை செய்ய வேண்டும் என்பதுதான் ஆனந்தியின் முடிவு. அதே நேரத்தில் இந்த கர்ப்பத்தை எப்படியாவது கலைத்துவிட்டு ஆனந்தியை அன்புடன் சேர்த்து வைக்க மித்ரா திட்டமிடுகிறாள்.
அன்புவை காதலிப்பதை உன் அப்பா அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என ஆனந்தியை மிரட்டுகிறாள். அதே நேரத்தில் இவர்கள் இருவரும் பேசுவதை ரெஜினா கேட்டு விடுகிறாள்.
கண்டிப்பாக இதில் சந்தேகப்படும் ரெஜினா அன்பு அல்லது மகேஷிடம் இதைப் பற்றி சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலம் மித்ராவை பின் தொடர்ந்து ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அன்பு அல்லது மகேஷ் தெரிந்து கொள்வார்கள்.
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு நான்தான் காரணம் என உணர்ந்து கொள்ளும் மகேஷ் ஆனந்தியை ஏற்றுக் கொள்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.