ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் என்ன தான் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்தாலும் போகப்போக இந்த நாடகம் ஓவர் பில்டப் கொடுத்து வருகிறது. அதாவது இதுவரை குணசேகரனின் ஆணாதிக்கத்தை வைத்து வந்த நிலையில், இவரிடம் இருந்து தப்பித்து சுகந்திரமாக வாழ வேண்டும் என்று முயற்சி எடுக்கும் பெண்கள் சொந்த காலில் நிற்க போராடுவதை மையமாக வைத்து வந்தது.

ஆனால் ஜீவானந்தம் வந்த பிறகு இந்த கதை அப்படியே வேறு டிராக்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் அவர்களுக்குள் இருக்கும் திறமையை கொண்டு வந்து சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த ஜீவானந்தத்திற்கு ரொம்பவே ஓவர் பில்டப் கொடுத்து காட்டி வருகிறார்கள். இவருடைய பேக்ரவுண்ட் என்ன, உண்மையான விஷயங்கள் என்னவென்று சொல்லாமலே சஸ்பென்சாக கதையை உருட்டி வருகிறார்கள்.

அத்துடன் இவரை காலி பண்ண வேண்டும் என்று புதிதாக முளைத்திருக்கும் சைக்கோ வில்லனை காட்டும் பொழுது இவர் எல்லாம் அந்தளவுக்கு ஒர்த்தே இல்லை. எப்படியும் இவரால் ஜீவானந்தத்தை ஒண்ணும் பண்ண முடியாது என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் ஏன் இவரை பெரிதாக காட்டி பில்டப் பண்றாங்க. இதுல வேற கதிர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு அலப்பறை செய்து வருகிறார்.

அடுத்தபடியாக ஜனனி, புருஷன் அந்த நிலைமையில் இருக்கிறதையும் கண்டுகொள்ளாமல் ஜீவானந்தத்தை கண்டுபிடித்து அப்பத்தாவின் சொத்தை மீட்டு எடுப்பேன் என்று சபதம் போட்டு போராட்டம் செய்கிறார். ஜனனி, ஜீவானந்தத்தை பார்த்தா மட்டும் எல்லா விஷயமும் முடிந்திடுமா என்ன. கதை எங்க ஆரம்பித்தது எதன் வழியாக போய்க்கொண்டிருக்கிறது என்று குழப்பத்திலேயே நகர்ந்து வருகிறது.

இவர்களை எல்லாம் விட ஈஸ்வரியின் விஷயத்தை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அதாவது இவருடைய எக்ஸ் காதலன் தான் ஜீவானந்தம் என்று யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார். ஓகே இது சரியாக இருந்தாலும், அட்லீஸ்ட் ஜனனிடம் ஜீவானந்தம் ஒரு சொத்து விஷயமாக என்னுடைய கிராமத்திற்கு வந்தார். அங்கே வைத்து அவரைப் பார்த்து நான் பேசினேன் என்று ஜனனிடம் சொல்லி இருக்கலாம்.

அதை வைத்தாவது ஜனனி வேறொரு முயற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அதையெல்லாம் விட்டு போட்டு ஈஸ்வரி எதுவுமே நடக்கவில்லை என்பது போல் சக்திக்கு உருகி உருகி பணிவிடை செய்து வருகிறார். இந்த இடத்தில் ஜனனி இருந்து பார்த்திருந்தால் செண்டிமெண்டாக இவர்களுடைய புரிதல் இன்னும் பலமாக அமைந்திருக்கும். ஆக மொத்தத்தில் ஜனனி ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் இங்கே சக்தி உயிர் போயிடும் போல. கொஞ்சம் லாஜிக்கோட கதை நகர்ந்தால் இன்னும் சுவாரசியமாக பார்ப்பதற்கு இருக்கும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →