தொலைக்காட்சி

பாண்டியன் ஸ்டோரில், குடும்ப வாரிசை வயிற்றில் சுமக்கும் மயில்.. ஏற்றுக்கொள்வாரா சரவணன்?

By Vijay · 15 ஜூன் 2025 · Updated 19 ஜூன் 2025
At the Pandian Store, a peacock carrying the family heirloom in its belly.

Vijay Tv : விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில். மயில் மறைத்த உண்மைகள் அனைத்தும் அறிந்து , சரவணன் மயில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு,சரவணன் மயிலை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டார்.

இவ்வாறாக, சரவணன் வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் போதெல்லாம். ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களையும் மயிலை சென்று பார்க்கவிடாமல் தட்டிக்கொண்டே வந்தார். மயில் செய்த தவறை சரவணனால் மன்னிக்கவே முடியவில்லை.

மயில் எவ்வளவு எடுத்துக் கூறியும், சரவணன் தன் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. இவ்வாறு சில நாட்கள் கடந்தது.இந்த நிலையில் மயில் கர்ப்பமாக இருப்பது மயில் மற்றும் மயிலின் குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது. மயிலின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

மயிலின் அம்மா மயிலை அழைத்துக் கொண்டு பாண்டியன் வீட்டிற்கு சென்று. உங்கள் குடும்பத்திற்கு முதல் வாரிசை தன்மகள் வயிற்றில் சுமப்பதாக கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கிறாள். பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை.

மயிலை சரவணன் ஏற்றுக் கொள்வாரா?

பாண்டியனும் சரவணனும் வீட்டிற்கு வரவே, பாண்டியனிடமும் நீங்கள் தாத்தாவாக போகிறீர்கள் என்று கூறி கட்டிப்பிடித்துக் கொள்கிறார் மயிலின் அப்பா . சரவணனிடம் நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள் என்று சொல்கிறார் .

சரவணனுக்கு சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க மயிலின் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்வாரா சரவணன். அல்லது வீட்டிற்கு மயில் சொன்ன அனைத்து பொய்களையும் தெரியப்படுத்துவாரா, இல்லை மறைத்து மயிலை ஏற்றுக் கொள்வாரா. குழந்தையை காரணமாக கொண்டு மயிலும் சரவணனும் இணைவார்களா, இந்த வார எபிசோடுகளில் பார்க்கலாம்.