Director Bharathiraja: இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு பல நடிகைகளை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் தனது படங்கள் மூலம் அறிமுகமாகும் நடிகைக்கு ஆர் என்ற எழுத்தில் தான் பெயர் வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவ்வாறு ரேவதி, ராதிகா, ரேகா என பல நடிகைகள் பாரதிராஜாவினால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் பாரதிராஜா படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஒருவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். ஒரு காலகட்டத்தில் கோலோச்சி இருந்த நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மேலும் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இப்போது 50 வயதில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் ரேகா. இப்படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
காலம் கடந்தாலும் இந்த படத்தில் ஜெனிபர் டீச்சராக அவர் நடித்ததை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதன் பிறகு ராமராஜன், கமல் போன்ற பல நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்திருந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சியில் ரேகா பங்கு பெற்றார். இப்போது 50 வயதை கடந்த நிலையில் 20 வருடங்களுக்குப் பின்பு கதாநாயகியாக ஒரு படத்தில் நடிக்கிறார். அதாவது மாலதி நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் மிரியம் மா என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரேகா நடிக்கிறார்.
அதுவும் இந்த படத்தில் கர்ப்பிணியாக அவர் இருக்கும் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி இருந்தது. மேலும் இப்படத்தில் அனிதா சம்பத், விஜே ஆஷிக், எழில்துறை போன்றோரும் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தைப் பற்றிய அடுத்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.