பிக்பாஸ் சீசன் 9-க்கு முதல் ஆளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்.. வைரல் ஆனதுக்கு இந்த வாய்ப்பாவது கிடைச்சதே!

Bigg Boss 9: வந்த வரைக்கும் லாபம் என்று சொல்வார்கள் அப்படி ஒரு விஷயம் தான் இந்த வைரல் பிரபலத்திற்கு நடந்திருக்கிறது. ஜூலை மாதம் வந்தாலே பிக் பாஸ் சின்னத்திரை நேயர்களிடையே பற்றிக்கொள்ளும்.

அதிலும் இந்த முறை கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியை தாண்டி விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா என்ற கேள்வி தான் வந்திருக்கிறது. இதற்கு காரணம் சில மாதங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் டிவி வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாவது தான்.

பிக்பாஸ் சீசன் 9

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் போட்டியாளர் பற்றி செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தங்க பாண்டி என்று சொன்னால் யாருக்கும் இவரை அடையாளம் தெரியாது. அதுவே கூமாபட்டி என்று சொன்னால் ஏங்க என்று இவர் அழைக்கும் குரல் தான் நமக்கு ஞாபகத்திற்கும். இவர் ஒரே ஆளாக 500க்கும் மேற்பட்ட வீடியோவை போட்டு தன்னுடைய சொந்த ஊரை பிரபலப்படுத்தி இருக்கிறார்.

இருந்தாலும் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இவரை அந்த ஊர் பற்றி இனிமேல் வீடியோ போட கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும். இந்த நிலையில் தான் இவருக்கு தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.