பிக் பாஸ் சீசன்-6 களமிறங்கும் 20 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட.. வேட்டையாட காத்திருக்கும் ஆண்டவர்

அக்டோபர் 9-ஆம் தேதியான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் 20 போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஜி பி முத்து: டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஜிபி முத்து. சினிமாவிலும் ஒருசில படங்களில் நடித்து வரும் இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர்: டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். விஜய், சிம்பு உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் பணிபுரிந்த இவர், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.

அமுதவாணன்: சின்னத்திரையில் புகழ்பெற்ற காமெடியனாக வலம் வருபவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.  இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார்.

அசல் கொலார்: ஏராளமான சுயாதீன இசைப் பாடல்களை பாடி ஃபேமஸ் ஆன சுயாதீன இசைக்கலைஞரான அசல் கொலாரும் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ள உள்ளார். இவர் யூடியூபில் வைரல் ஹிட் அடித்த ஜோர்தால என்கிற பாடலை பாடியவர்.

மணிகண்டன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் உடன்பிறந்த சகோதரருமான, சீரியல் நடிகர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திர நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

விஜே மகேஸ்வரி: பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே மகேஸ்வரியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். சமுத்திரகனிக்கு ஜோடியாக ரைட்டர் படத்திலும் கமலின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

பாடகி ராஜேஸ்வரி: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன பாடகி ராஜேஸ்வரியும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலை பாடியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடிகே: ராப் பாடகரான ஏடிகேவும் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான கடல் படத்தில் இடம்பெறும் மகுடி என்கிற பாடலையும், அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெறும் சோக்காலி என்கிற பாடலையும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவின் கணேசன்: கடந்த சீசன் முதல் திருநங்கைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டதால், கடந்த முறை நமீதா மாரிமுத்து கலந்துகொண்ட நிலையில், இம்முறை ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை ஒருவர் போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஷெரினா: ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மாடல் அழகி கலந்து கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் இந்த சீசனில் மாடல் அழகி ஷெரினா ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

மெட்டி ஒலி சாந்தி: சினிமாவில் டான்சராக இருந்து வந்தவர் சாந்தி. இவர் மெட்டி ஒலி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள இவர், தற்போது போட்டியாளராக பிக்பாஸ் சீசன்6ல் பங்கேற்பு போகிறார்.

விஜே கதிரவன்: சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் விஜே கதிரவன். அதன்பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்த இவர் தற்போது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்.

ஜனனி: ஏற்கனவே நடந்து முடிந்த சீசன்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபேமஸ் ஆனது போல தற்போது இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியான ஜனனி சீசன்6ல் பங்கேற்பு போகிறார்.

மேலும் சீரியல் நடிகைகளான மைனா நந்தினி, ஆயிஷா, ரச்சிதா, சீரியல் நடிகரான அஸீம், ராம் ராமசாமி, விக்ரமன் இவர்களுடன் மக்கள் சார்பில் தனலட்சுமி என்ற பெண்ணும் தேர்வு செய்து, ஆக மொத்தம் 20 போட்டியாளர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் அறிமுகம் செய்யப் போகிறார்.