தொலைக்காட்சி

அறிவுக்கரசியிடமிருந்து தப்பி ஓடிய தர்ஷன். வெளிவந்த ஆதி குணசேகரனின் உண்மை முகம்…

By Vijay · 20 ஜூன் 2025 · Updated 20 ஜூன் 2025
Darshan escaped from the intelligence agency. The true face of Adi Gunasekaran revealed...

Sun Tv : சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் “எதிர்நீச்சல்” சீரியலில், தர்ஷன் திருமணம் வேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக இத்திருமணத்தை நீ செய்து தான் ஆக வேண்டும் என்று ஆதி குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி கூறியுள்ளனர். இந்நிலையில் தர்ஷன் கல்லூரிக்கு செல்லும்போது கூட அறிவுக்கரசி தன் கண்காணிப்பில் தான் தர்ஷன் இருக்க வேண்டும் என்று அன்பையும் தர்ஷன் உடன் கல்லூரிக்குள் அனுப்பி வைக்கிறாள்.

அங்கு ஆசிரியர் உன் தங்கையா என தர்ஷனிடம் கேட்கிறார். அதற்கு தர்ஷன் இவள் என் தங்கை இல்லை என கூறிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் செல்கிறான். எப்போதும் குழந்தை போலவே இருந்து வந்த அன்பு தற்போது பேச ஆரம்பித்திருக்கிறாள். தர்ஷனிடம் தங்கை அல்ல என்று மட்டும் கூறி விட்டீர்கள், திருமணம் செய்ய போகும் பெண் என சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறாள் அதற்கு தர்ஷன் எதற்கு அதெல்லாம் கூறிக்கொண்டு அவர் கேட்டதற்கு நான் பதில் சொன்னேன் என சொல்கிறான்.

உடனே அன்பு நான் ஒன்னும் சின்ன குழந்தை அல்ல எனக்கும் எல்லாம் புரியும். என் அக்கா சொல்வதைப் போல் நீங்கள் என்னை ஏமாற்றப் போகிறீர்கள் அதனால் நான் உங்கள் கூடவே தான் இருக்க போகிறேன் என்று எங்கு சென்றாலும் கூடவே வருகிறாள். இதனால் ஆத்திரமடைந்த தர்ஷன் கழிவறைக்கு செல்கிறான். அங்கு சுவர் ஏரி குதித்து தப்பித்து ஓடி விடுகிறான். சிறிது நேரம் காத்திருந்த அன்பு, தர்ஷன் வரவில்லை என்றதும் அறிவுக்கரசி இடம் சொல்கிறாள். அறிவுக்கரசி அவளது அண்ணனும் கல்லூரியில் எல்லா இடங்களிலும் தேடியும் தர்ஷன் கிடைக்கவில்லை. பிறகு சிசிடிவி பார்த்து தர்ஷன் தப்பி ஓடியதை அறிந்து கொள்கிறார்கள்.

அறிவுக்கரசி தீராத கோவத்துடன் குணசேகரன் வீட்டிற்கு வருகிறாள். தர்ஷன் எங்கே என்று கேட்கிறாள் ஈஸ்வரியிடம், அதற்கு ஈஸ்வரி நீங்கள் தானே தர்ஷனை அழைத்துக் கொண்டு சென்றீர்கள் என்று கேட்கிறாள். உடனே அறிவுக்கரசி கோபப்பட்டு கத்துகிறாள். இவ்வாறு அறிவுகரசி மற்றும் வீட்டில் உள்ள மருமகளுக்குள் மோதல் ஏற்படுகிறது. உடனே ஆதி குணசேகரன் சற்று பொறுமையாக இருங்கள் என்ன நடந்தது என்று கூறு அறிவுக்கரசி என கேட்கிறான். அறிவுக்கரசியும் எல்லா விவரத்தையும் சொல்கிறாள். இதை கேட்டதும் ஆதி குணசேகரன் ஈஸ்வரியிடம் கத்துகிறான்.

ஆதி குணசேகரனின் உண்மை முகம்…

தன் மகனை தேட சொல்லும் ஈஸ்வரியை தடுத்து வீட்டிற்குள் இழுத்து விட்டு, முன்பு உன் மகள் தர்ஷினியை ஓடவிட்டு நாடகம் ஆடினீர்கள். இப்போது தர்ஷனையும் நன்றாக திட்டம் தீட்டி அனுப்பி வைத்து விட்டீர்கள் என ஆதி குணசேகரன் கத்திவிட்டு, இவர்கள் யாராவது வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தால் காலை வெட்டி விடுமாறு கதிரிடம் சொல்கிறான்.

இது ஒரு பக்கம் இருக்க தர்ஷனை அறிவுக்கரசி தேட ஆரம்பித்துள்ளார் மற்றும் பார்க்கவியையும் தேட ஆரம்பித்துள்ளனர். இருவரும் கையில் கிடைத்தால் கொலை செய்யுமாறு திட்டம் தீட்டி வருகின்றனர். மருமகள்கள் ஒரு பக்கம் தேட ஆரம்பிப்பார்கள் என்றும் . இனிவரும் கதைக்களத்தில் ஜீவானந்தத்தை பார்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தர்ஷன் யார் கைகளில் கிடைக்கப் போகிறார் என்பதுதான் எதிர்வரும் எபிசோடுகளில் கதைக்களமாக இருக்கப்போகிறது.