தொலைக்காட்சி

வீட்டை விட்டு வெளியேறும் தர்ஷன்? அறிவுக்கரசியிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஆதி குணசேகரனின் குடும்பம்…

By Vijay · 18 ஜூன் 2025 · Updated 18 ஜூன் 2025
Darshan leaving home? Adhi Gunasekaran's family is suffering from being trapped by the intellectual...

Sun Tv : சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்களுக்கு எந்த வித ஏமாற்றமும் அளிக்காமல், சிறிதளவுகூட தொய்வில்லாமல் , அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்களை எதிர்பார்ப்புடனே வைத்துக்கொண்டு இந்த சீரியலை தயாரித்து வருகிறார் இயக்குனர்.

ஆதிரையின் திருமணம், தர்ஷினியின் திருமணம், தற்போது தர்ஷனின் திருமணம் என அடுத்தடுத்து பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது எதிர்நீச்சல். பெண்களும் ஆண்களும் பகையாக இருந்து வந்த நிலையில், பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி என்று அறிவுக்கரசி கேரக்டரை நன்றாக பயன்படுத்துகிறார் இயக்குனர்.

தர்ஷன் தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறியவுடன். வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்தது. அறிவுக்கரசி தர்ஷன் செல்லும் இடமெல்லாம் சென்று, அவரை நோட்டமிட்டு தர்ஷன் பார்க்கவியுடன் பேசி தான் திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளான் என இதற்கு ஈஸ்வரியும் ,தர்ஷினியும் துணை போனதாக ஆதாரத்துடன் ஆதி குணசேகரனுக்கு தெரியப்படுத்துயுள்ளார்.

ஆதி குணசேகரன் தன் மகனை அடித்து, உதைத்து இந்த திருமணத்தை செய்து கொள்ளவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். இதனால் தர்ஷன் பயந்து , அவனது நண்பனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக கூறுகிறான். பிறகு வெளியே வந்து ஆதி குணசேகரனிடம் நான் கல்லூரிக்கு சென்று சான்றிதழ் பெற்று வருகிறேன் என்று கேட்கிறான். நீ எங்கேயும் செல்ல வேண்டாம் வீட்டிலேயே இரு உள்ளே போ என்று சொல்கிறார்.

அறிவுக்கரசியிடம் சிக்கி தவிக்கும் ஆதி குணசேகரன் குடும்பம் …

உடனே அறிவுக்கரசி வீட்டில் நுழைந்து மாப்பிள்ளையை நாங்கள் எங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறோம். நாங்கள் மாப்பிள்ளையை எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என கேட்கிறாள். உடனே சக்தி அப்படியெல்லாம் நாங்கள் அனுப்பி விட முடியாது என்று அறிவுக்கரசி இடம் சொல்லுகிறான். அறிவுக்கரசி நீங்கள் அனுப்பிதான் ஆக வேண்டும் தர்ஷன் பண்ணிய காரியம் அப்படி என்று கூறுகிறாள்.

தர்ஷன் தன் வீட்டை விட்டு வெளியேறி சென்று பார்கவியை திருமணம் செய்து, தனது படிப்பிலும் வெற்றி பெற்று சாதிப்பானா? வீட்டில் உள்ள மருமகளுக்கு தர்ஷனை காப்பாற்றுவது பெரும்பாடகத்தான் இருக்கப் போகிறது. ஏனெனில் தன் கணவன்மார்கள் எல்லாம் சமாளிப்பதை அடுத்து இவர்கள் அறிவுக்கரசியையும் சமாளிக்க வேண்டும். அனைவரையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல் அடித்து வெல்வார்களா பெண்கள், வரும் கதைகளத்தில் பார்க்கலாம்.