தப்பா பேசிட்டேன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மாரிமுத்து.. என்னை ஆள விடுங்க என தெறித்து ஓடிய சம்பவம்

Ethirneechal Marimuthu: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வாழ்ந்த நடிகர் மாரிமுத்து, தன்னுடைய 57வது வயதில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய மரணத்திற்கு சினிமா பிரபலங்களும், ஒட்டுமொத்த எதிர்நீச்சல் சீரியல் குழுவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மாரிமுத்துவின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான தேனியில் நடைபெற இருக்கிறது.

ஒரு சீரியல் அதில் நடிக்கும் வில்லனால் பேமஸ் ஆனது என்று சொன்னால் அது எதிர்நீச்சல் தான். அந்த அளவுக்கு மக்கள் ஆதி குணசேகரனை விரும்பினார்கள். சீரியல் முழுக்க மீனாட்சி அம்மனை காட்சிக்கு ஒரு முறை கையெடுத்து கும்பிடும் ஏஜிஎஸ் ஆக நடித்த மாரிமுத்து, சில மாதங்களுக்கு முன்பு ஜோதிடத்திற்கு எதிராக ஒரு சில விஷயங்களை பேசி இருப்பார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கரு பழனியப்பன் நடத்திக் கொண்டிருந்த தமிழா தமிழா ஷோ, அவர் விலகியதற்கு பின் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார். இதன் முதல் எபிசோடு ஜோதிடம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக மாரிமுத்து வந்திருந்தார்.

மாரிமுத்து ஜோதிடத்தை நம்புவது என்பது முட்டாள்தனமான விஷயம் என பேசிய அந்த பத்து நிமிட வீடியோ அப்போது பயங்கரமாக ட்ரெண்ட் ஆகியது. இன்று அவர் மரணமடைந்த செய்தி வைரல் ஆகி வரும் நேரத்தில், அந்த ஷோவில் கலந்து கொண்ட ஜோதிடர் ஒருவர், அந்த நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என பேசிய வீடியோவும் இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த ஜோதிடர் தன்னுடைய பேட்டியில், மாரிமுத்து பேசிய அந்த பத்து நிமிடத்திற்கு, ஜோதிடர்கள் தரப்பில் அமர்ந்திருந்த அத்தனை பேரின் மைக்குகளும் அணைக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு பதில் சொல்ல யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். இதனால்தான் அப்போது ஒட்டுமொத்த ஜோதிடர்களும் அமைதியாக இருந்தது போல் காட்டப்பட்டதாம்.

பேசி முடித்ததும், அந்த ஜோதிடர் நீங்கள் ஒரு ஐந்து நாட்கள் எங்களுடன் தங்குங்கள், உங்கள் வாழ்வில் அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என நான் கணித்து சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மாரிமுத்து, அய்யய்யோ என்ன ஆள விடுங்க, நான் வருமானத்திற்காக தான் இப்படி பேசினேன், மன்னித்துக் கொள்ளுங்கள் என சொல்லியதாக இப்போது அந்த ஜோதிடர் சொல்லி இருக்கிறார்.