அன்றைய அஜித் வேற மாதிரி.. பீர் பார்ட்டிக்கு பஞ்சமே இருக்காது, போட்டுக் கொடுத்த இயக்குனர்

தற்போது நடிகர் அஜித் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து ஒரு புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். இதனால் அவர் பல விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் அவர் அதிகமாக கலந்து கொள்வது கிடையாது.

மேலும் நடிப்பு, குடும்பம் என்று அதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வட்டாரங்களில் கூட அவர் அதிகமாக எந்த நட்புறவும் வைத்துக்கொள்வது கிடையாது. இப்பொழுதுதான் அவர் இப்படி இருக்கிறார் ஆனால் அவர் நடிக்க வந்த புதிதில் மிகவும் கலகலப்பாக இருப்பாராம்.

அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே, பவித்ரா போன்ற திரைப்படங்களின் மூலம் சிறிது சிறிதாக முன்னேறி வந்தார். அப்போது அவரின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் ஆசை.

அந்தத் திரைப்படம் அவருக்கு சினிமா வாழ்வில் ஒரு முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாகும். அந்த படத்தின் போது அங்கே இருக்கும் படக்குழுவினருடன் அவர் மிகவும் உற்சாகமாக உரையாடுவாராம். அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் முடிந்த பின்பு அங்கு இருப்பவர்களுக்கு நிறைய பீர் வாங்கி கொடுப்பாராம்.

மேலும் ஓய்வு நேரங்களில் பைக், வேன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அனைவரோடும் அரட்டை அடித்துக் கொண்டு வெளியில் செல்வார், மிகவும் யதார்த்தமான மனிதர் என்று அந்தப் படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இவர் தற்போது ஒரு இயக்குநராக, நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கிறார். இவரின் இயக்கத்தில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கலாட்டா கல்யாணம், சண்டைக்கோழி 2, வீரமே வாகை சூடும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.