ஆதி குணசேகரனை அசிங்கப்படுத்திய சில்வண்டு.. பெரிய ஆப்பு, சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

Ethir Neechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை திருமணத்தால் ரசிகர்கள் அப்செட் ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் ஜான்சி ராணி வீட்டு மருமகளான ஆதிரை தனது மாமியாரால் படாதபாடு பட்டு வருகிறார்.

மேலும் நேற்று கரிகாலன் மற்றும் ஆதிரைக்கு முதல் இரவு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்நிலையில் ஆதிரை தனது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு என்னை நெருங்கினால் செத்து விடுவேன் என்று கரிகாலனை மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் கரிகாலனும் அடங்கிப் போய் விடுகிறார்.

இந்நிலையில் வீட்டு மருமகன் கரிகாலனை கறி விருந்துக்கு அழைக்க வீட்டு மருமகள்களை குணசேகரன் போகச் சொல்கிறார். ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் ஜனனி மற்றும் நந்தினி இருவரும் ஆதிரைக்காக அழைத்து வர கிளம்புகிறார்கள். ஆனால் கோபத்தில் இருக்கும் ஆதிரை இவர்களிடம் பேச மறுக்கிறார்.

அதன் பிறகு ஜனனி அருண் மூச்சுப் பேச்சு இன்றி இருக்கும் விஷயத்தை சொன்ன பிறகு ஆதிரை கவலை கொள்கிறார். கரிகாலனை விவாகரத்து செய்துவிட்டு எப்படியும் அருண் உடன் உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று ஜனனி வாக்கு கொடுத்து இருக்கிறார். இதனால் ஆதிரை சற்று சமாதானம் ஆகிறார். அதன் பின்பு மறு வீட்டுக்கு ஆதிரை கிளம்பி வருகிறார்.

அப்போது ஆரத்தி தட்டு தயார் பண்ண வில்லையா என குணசேகரன் கேட்க, ஏன் நீங்க எடுக்க வேண்டியதுதானே என்று ஜனனி கூறுகிறார். எப்போதும் கவுண்டர் கொடுக்கும் நந்தினி கரெக்டாக அந்த நேரத்தில் எல்லாம் முறையா செஞ்சீங்களா இதை மட்டும் முறையா செய்வதற்கு என்று சவுக்கடி கொடுக்கிறார்.

மேலும் பள்ளியில் ஏதோ பிரச்சினை காரணமாக ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார். அப்போது குணசேகரன் ஒரு பொம்பள புள்ளைக்கு ஏதை சொல்லிக் கொடுக்கணும்னு கூட தெரியல என எல்லோரையும் அசிங்கப்படுத்துகிறார். ஆனால் பெரியப்பாவுக்கே பெரிய ஆப்பாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

அதாவது எனக்கு யாரும் கத்துக் கொடுக்கல, அடுத்தவங்களை எப்படி நடத்தக்கூடாதுன்னு உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன் பெரியப்பா என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதனால் புள்ள பூச்சிக்கெல்லாம் கொம்பு முளைச்சிட்டா என கடும் கோபத்தில் இருக்கிறார் குணசேகரன். இவ்வாறு விறுவிறுப்பான கதைக்களத்துடன் எதிர்நீச்சல் தொடர் சென்று கொண்டிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →