டிஆர்பி-க்காக ஆர்டிஸ்ட்களை பாடா படுத்தும் எதிர்நீச்சல்.. குணசேகரனின் தம்பி பொண்டாட்டிக்கு போடப்பட்ட ட்ரிப்ஸ்

Ethirneechal Artist: சீரியல் எப்படி இருக்கணும், எந்த மாதிரியான கதை கொண்டு வரணும் என்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை பார்த்து மற்ற நாடகங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் அவர்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வந்தார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் மக்களின் ஃபேவரிட் ஆக அமைந்தது.

அப்படிப்பட்ட இந்த நாடகத்திற்கு மிகப் பொக்கிஷமாக அமைந்த கதாபாத்திரம் தான் குணசேகரன். எதார்த்தமான நடிப்பும், கம்பீரமான குரலும், அனைவரையும் அதிகார செய்யும் ஆளுமையும் கொண்டவர் தான் குணசேகரன். முக்கியமாக எந்த அளவிற்கு வில்லன் மாதிரி நடிப்பாரோ, அதே அளவிற்கு நக்கல் நையாண்டியும் அதிகமாக காணப்பட்டது. அதனாலேயே மக்கள் வியந்து பார்க்கும் கேரக்டராக அமைந்தது.

இவருக்கு அடுத்தபடியாக அந்த வீட்டில் நான்கு மருமகள்கள் இருந்தாலும் ரொம்பவே சுவாரஸ்யமான கேரக்டர் யார் என்றால் அது நந்தினி உடைய கேரக்டர் தான். துருதுருவென்று பேச்சும், டைமிங் காமெடியில் நக்கல் செய்யும் விதமும் மனதில் பட்டதை உடனே பேசக்கூடிய கேரக்டராகவும் நந்தினி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். முக்கியமாக குணசேகரன் மற்றும் நந்தினி தான் எலியும் பூனையுமாக சண்டை போட்டு வருவார்கள்.

அப்படிப்பட்ட இவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது வெறும் சாதாரண லோ பிபி தான் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் ட்ரிப் மட்டும் போட்டா போதும் என்று கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இவருடைய உடல் சீக்கிரமாக குணமாகி பழையபடி துரு துருவென்று பேசும் நந்தினியை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று இவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். தற்போது இவருடைய முழு கவனமும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது மட்டும்தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட இவருக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போனதற்கு இந்த நாடகத்தில் கொடுக்கப்பட்ட பிரஷர் மற்றும் டார்ச்சர்னால் தான் இந்த மாதிரி வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் எந்த அளவிற்கு நாடகத்தில் நடிக்கிறார்களோ, அதன் பிறகு சாதாரணமாக தன்னை மாற்றிக்கொண்டு இயல்பான வாழ்க்கைக்கு வந்து ரொம்பவே ரிலாக்ஸேசன் பண்ணிக்க வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →