பத்தே நாளில் ஜீவானந்தத்தின் சோலியை முடிக்கும் குணசேகரன்.. சைக்கோ உடன் போட்ட கூட்டணி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் மக்களின் பிடித்தமான சீரியலாக இருக்கிறது. ஜீவானந்தம் வந்த பிறகு இந்த நாடகத்தின் கதையை தலைகீழாக மாறிவிட்டது. இவருடைய உண்மையான நோக்கம் என்ன என்று புரியாத புதிராக இருக்கிறது. இதனால் ஜனனி இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ரோடு ரோடாக சென்று ஒவ்வொருவரிடமும் விசாரித்து வருகிறார்.

அடுத்ததாக ஜீவானந்திடம் பட்ட அவமானத்தை சரி செய்ய குணசேகரன் சைக்கோவிடம் டீல் பேசுகிறார். அவரும் இதெல்லாம் எனக்கு ஒரு ஜூஜிபி மேட்டர் என்று சொல்கிறார். உடனே குணசேகரன் இன்னும் பத்து நாட்களுக்குள் ஜீவானந்தத்தின் உயிர் போய்விட்டது என்ற தகவலை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கெடு கொடுத்திருக்கிறார்.

அடுத்து கதிர் அவருடைய கோபத்தை காட்டும் விதமாக அந்த ஜீவானந்தத்தின் உயிர் போகும் போது அதை என் கண்ணால் நான் பார்த்து ரசிக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே அந்த சைக்கோ அதெல்லாம் கச்சிதமாக செய்திடலாம். அதற்கு பதில் நீங்க எனக்கு என்ன தருவீங்க என்று கேட்கிறார். உடனே கதிர் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை எங்களுக்கு அவன் உயிர் போகணும் என்று கொடூரமாக சொல்கிறார்.

அடுத்தபடியாக ஆதிரை வெளியே போவதற்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்பொழுது கரிகாலன் எங்கே போற என்று கேட்டதற்கு பதிலே சொல்லாமல் இருந்த அதிரை, நீ யாரு எனக்கு நான் ஏன் உன்கிட்ட பேசணும் என்று சொல்கிறார். உடனே கரிகாலன் ஃபர்ஸ்ட் நம்ம ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போலாம் வா என்று கூப்பிடுகிறார். இந்த நேரத்தில் ஜான்சி ராணியும் வந்து விடுகிறார். அப்பொழுது ஆதிரையை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

இதை தட்டி கேட்ட குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஜான்சி ராணி, எதுவாக இருந்தாலும் நீங்கள் குணசேகரனிடம் பேசிக் கொள்ளுங்கள். இவளை கல்யாணம் பண்ணினதுக்கு லஞ்சமா கதிர் பெயரில் என் வீட்டுக்காரர் கல்யாண மண்டபத்தை எழுதிக் கொடுத்து இருக்கிறார் என்று அனைவரும் முன்னடியும் உண்மை போட்டு உடைத்து விடுகிறார்.

இப்பொழுது தான் அவர்கள் அனைவருக்கும் ஆதரையை ஏன் வலுக்கட்டாயமாக கரிகாலுடன் கல்யாணத்தை பண்ணி வைத்திருக்கிறார் என்று புரிந்திருக்கிறது. அடுத்தபடியாக ஆதிரை இன்று ஒரு நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள் என்னுடைய பதிலை வந்து நான் சொல்கிறேன் என்று கிளம்பி விடுகிறார். அதற்கு காரணம் ஆதிரை தற்போது அருணை பார்க்கப் போகிறார். இதற்குப் பிறகாவது ஒரு தெளிவான முடிவை எடுத்து அதன் படி நடந்தால் கரிகாலன் வாழ்க்கையாவது நிம்மதியாகும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →