சொத்தும், பொண்டாட்டியும் இல்லாமல் நடுத்தெருவில் திண்டாட போகும் குணசேகரன்.. எல்லாத்துக்கும் ஆப்பு வைத்த ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாளாக அராஜகத்தின் மொத்த உருவமாக குணசேகரன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது இவருடைய நிலைமை சேர்த்து வைத்த சொத்தும் இல்லாமல், கட்டிட்டு வந்த பொண்டாட்டியும் இல்லாமல் நடுத்தெருவில் திண்டாடுவது போல் ஆகிவிட்டது.

அத்துடன் நாலா பக்கமும் இவரை தேடி பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் குணசேகரன் ஆசைப்பட்டு அடைய நினைக்கும் 40% சொத்து. இது இவர் கையில் போகாதபடி ஜீவானந்தம் மற்றும் அப்பத்தா செய்யும் தந்திரமான செயல்கள். அடுத்ததாக வளவன் மற்றும் ஜான்சி ராணி கொடுக்கும் குடைச்சல்.

இதற்கிடையில் இவர் வீட்டில் இருந்த பெண்களே இவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். இப்படி இவருடைய அழிவு காலம் இவரை தேடி நெருங்கி விட்டது. அடுத்தபடியாக ஜீவானந்தனிடம் இருக்கும் அப்பத்தாவை பார்த்து பேசுவதற்காக மருமகள் அனைவரும் வந்து விட்டார்கள். அங்கே இவருடைய மகள் வெண்பா, ஜனனியை பார்த்து பேசுகிறார்.

அப்பொழுது உணர்ச்சிவசப்பட்டு இந்த குழந்தையின் அம்மாவின் இறப்பிற்கு தன் கணவர் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் கண்ணீர் வடித்து அரவணைக்கிறார் நந்தினி மற்றும் ஈஸ்வரி. அத்துடன் ஈஸ்வரியை பார்ப்பதற்கு என்னுடைய அம்மா போல் இருக்கிறது என்று ஜீவானந்தத்தின் மகள் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார். அவரும் வெண்பாவை அரவணைப்புடன் அம்மா போலவே கட்டி அணைக்கிறார்.

இதை பார்த்ததும் ஜீவானந்தத்தின் கண்ணில் ஏதோ ஒரு இணை புரியாத பந்தம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து ஜீவானந்தத்தின் மகளை தன் சொந்த மகளாக வளர்க்க போகிறார் ஈஸ்வரி. அடுத்ததாக ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டிற்கு வந்து என் மகனின் வாழ்க்கைக்கு எனக்கு இன்றைக்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். இவரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக கரிகாலன் மற்றும் ஆதிரையை ஹனிமூனுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு ஆதிரை சம்மதம் தெரிவிக்காமல் வழக்கம்போல் கரிகாலன் கூட என்னால் வாழ முடியாது என்று சொல்கிறார். இங்கே யாரும் உன்னுடைய சம்மதத்தை கேட்கவில்லை என்னுடைய முடிவு இதுதான். இதை நீ செய்தால் உயிரோடு இருக்கலாம். இல்லையென்றால் நடக்கிற விபரீதமே வேற என்று மிரட்டுகிறார். ஆனாலும் ஆதிரை அவருடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் இனி குணசேகரனின் ஜம்பம் பலிக்கப் போகிறது இல்லை.