பெண்களின் வீக்னஸ் பாயிண்டை யூஸ் பண்ணிய குணசேகரன்.. மொத்தத்துக்கும் ஜீவானந்தம் வைத்த ஆப்பு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் எல்லா குடும்பங்களிலும் கொண்டாடி வருகின்ற ஒரு நாடகமாக முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் குணசேகரன் இதுவரை கெத்தாக இருந்து குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார். எப்பொழுது ஜனனி வீட்டிற்குள் வந்தாலோ அப்பொழுதே இவருடைய ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி விட்டது.

ஆனால் தற்போது இவருடைய நிலைமை பல் பிடுங்கின பாம்பாக இருக்கிறது. அதற்கு காரணம் ஜீவானந்தம். குணசேகரனின் ஆணவத்திற்கும், திமிருக்கும் மொத்தமாக ஆப்பு வைத்து விட்டார். அது மட்டும் அல்லாமல் எந்த அளவுக்கு இவரை அவமானப்படுத்தி பார்க்க முடியுமா அதை சரியாக தரமான சம்பவத்துடன் வச்சு செஞ்சிட்டாரு. இதனால் அடிபட்ட பாம்பாக, ஜீவானந்தத்தை கொத்த படையெடுக்க நினைக்கிறார்.

அதற்காக சைக்கோ மாதிரியான ஒரு நபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அப்பொழுது இவருடைய பக்கவாத டிராமா பத்தியும் வெளிப்படையாக பேசி விட்டார். அதாவது இவருக்கு கையிலோ அல்லது உடம்பிலோ எந்த வித பிரச்சினையும் இல்லை. இதெல்லாம் இவருடைய வீட்டில் இருக்கும் பெண்களை நம்ப வைப்பதற்காக இவர் செய்த நாடகம்.

ஏனென்றால் இவர் இருக்கும் நிலைமையை பார்த்தாவது அந்த வீட்டில் உள்ள பெண்கள் இறக்கப்பட்டு ஜீவானந்தமிடம் போராடி சொத்தை மீட்டெடுப்பார்கள் என்று குணசேகரன், கதிர் மற்றும் ஆடிட்டர் போட்ட பக்கா பிளான். இவருடைய பிளான் படி அந்த வீட்டில் இருக்கும் பெண்களும் இவர் மேல் அனுதாபப்பட்டு எப்படியாவது ஜீவானந்தரிடம் பேசி சொத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

பெண்களின் வீக்னஸ் பாயிண்ட் என்னவோ அதை சரியாக புரிந்து குணசேகரன் காய் நகர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தின் முழு விபரத்தையும் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜனனி நாலா பக்கமும் விசாரித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக ஆதிரை, ஜான்சி ராணி மற்றும் கரிகாலனிடம் வெளியில் போயிட்டு வந்து என்னுடைய முடிவை சொல்றேன் என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அருணை சந்திப்பதற்கு அவருடைய வீட்டிற்கு சென்று பேசுகிறார். ஆனால் எவ்வளவு பேசியும் அருண் மற்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஆதிரையை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசி வரை அருண் எதுவுமே பேசாமல் ஆதிரை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் கண் கலங்கிய படியே ஆதிரை வெளியே போய்விட்டார். இனிமேல் இவர் எடுக்கப் போகும் முடிவு கரிகாலனுடனா அல்லது தனியாக இருக்கப் போகிறதா என்பது தான் கேள்வி குறியாக இருக்கிறது.