Gunasekaran’s daughter Darshini united with Appattha: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் அராஜகம் அதிகமானதால் தன்னுடைய மகள் தர்ஷினியின் கனவை சுக்கு நூறாக உடைத்து விட்டார். ஏற்கனவே அப்பாவால் நொந்து போன தர்ஷினி, தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது. இதனால் மனமுடைந்து போன தர்ஷினி வீட்டிற்கு வரும் வழியில் யாரோ மர்ம நபர்கள் குண்டுகட்டாக தூக்கி காரில் கூட்டு போய் விட்டார்கள்.
இங்கே தர்ஷனியை காணும் என்று ஜனனி மற்றும் ஈஸ்வரி நாலா பக்கமும் தேடிக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுது நடு ரோட்டில் தர்ஷினி பொருள்கள் மட்டும் இருப்பதை பார்த்து அனைவரும் பயத்துடன் தேட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் தர்ஷினியை காணும் என்கிற விஷயத்தை குணசேகரனிடம் ரேணுகா சொல்கிறார்.
பிறகு குணசேகரனும் ஒரு பக்கம் தேட ஆரம்பிக்கிறார்கள். இதற்கு இடையில் தர்ஷினியை கடத்திட்டு போன நபர்கள் ஒன்று ஜான்சி ராணி மற்றும் கரிகாலனாக இருக்கலாம். ஆனால் இவர்களுக்கு குணசேகரனை எதிர்த்து ஒரு காரியத்தை செய்யும் அளவிற்கு தைரியம் இருக்காது. அடுத்ததாக இப்பொழுது வரை கதிரை யாரு அடித்தார்கள் என்று தெரியவில்லை.
அந்த வகையில் அந்த மர்ம நபர்கள் கூட தர்ஷினியை கடத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கதிரை அடித்தது ஜீவானந்தத்தின் தோழர் கௌதமாக கூட இருக்கலாம். அப்படி என்றால் தர்ஷினி பாதுகாப்பாகவும் அவருடைய லட்சியத்தை அடைவதற்காகவும் ஜீவானந்தம் செய்த வேலைதான். இதற்கிடையில் அப்பத்தாவின் நிலைமை என்ன என்று தெரியாத வகையில் ஒரு புரியாத புதிராக இருக்கிறது.
ஆனால் கண்டிப்பாக அப்பத்தா உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் இல்லை என்பது ஜீவானந்தம் சொன்னதை வைத்து பார்க்கும் பொழுது புரிகிறது. அதனால் கண்டிப்பாக தர்ஷினியை காப்பாற்றும் விதமாக ஜீவானந்தம் தான் தோழரே வைத்து இப்படி ஒரு விஷயத்தை பண்ணியிருக்கிறார். அதன் மூலம் அப்பத்தாவிடம் தர்ஷினி சேர்ந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து தர்ஷினி அவருடைய லட்சியத்தை நோக்கி பயணிப்பாரா அல்லது ஜனனி ஈஸ்வரியை தவிக்க விடும் அளவிற்கு ஜீவானந்தம் இந்த முயற்சியில் பல நாட்களாக வைத்திருக்க மாட்டார். அப்படி இருக்கும் பொழுது இங்கு ஒரு டுவிஸ்ட் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ தர்ஷினி பாதுகாப்பாக இருப்பார், இதனை தொடர்ந்து ஈஸ்வரியும் அவருடைய இலட்சியத்துக்கு உறுதுணையாக குணசேகரை எதிர்த்து நிற்க போகிறார்.