500 கோடி வசூல் செய்தும் ஜெயிலரில் ரஜினிக்கு பிடித்தவர் இவர்தான்.. மாஸ் காட்டும் இல்லத்தரசிகளின் எதிரி

Actor Rajini: நீண்ட நாளுக்கு பிறகு ரஜினி படம் பார்த்த திருப்தியில், மக்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். 500 கோடிக்கு மேல் வசூல் கண்டு வரும் இப்படத்தில் ரஜினிக்கு பிடித்தவர் இல்லத்தரசிகளின் எதிரியான பிரபலம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

பல பிரபலங்களின் துணையோடு, நெல்சன் இயக்கத்தில் மேற்கொண்ட ஜெயிலர் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே பிடித்த கதாபாத்திரம் ஏற்று நடித்த பிரபலம் யார் தெரியுமா?

அவர்தான், வீட்டில் மருமகள் மட்டுமல்ல சீரியல் பார்க்கும் அனைவருக்கும் பூமர் அங்கிளாய் இருந்து வரும் மாரிமுத்து. சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் மேற்கொள்ளும் கதாபாத்திரம் பெண்களிடையே பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

அவ்வாறு இருக்க, சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் பன்னீர் என்னும் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு ரஜினிக்கும் மிகவும் பிடித்ததாக அமைந்ததாம். அதுவும் சீரியஸ் ஆன நேரத்தில் இவர் பாடும் தஞ்சாவூர் ஜில்லாக்காரி பாடல் தியேட்டரில் சிரிப்பலையை வரவைத்தது.

இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்க நெல்சன் தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், மேலும் போன் செய்து இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் ஏற்று நடித்தால் நல்லா இருக்கும் என கூறியதன் அடிப்படையில், அதற்கென்ன 200 சதவீதம் நான் எஃபெக்ட் போடுவேன் சார் என உடனே ஓகே சொல்லி விட்டாராம் ஆதி குணசேகரன்.

அதைத்தொடர்ந்து இவர் மேற்கொண்ட ஆர்வத்தின் வாயிலாய், இப்படத்தில் இவரின் கதாபாத்திரமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வந்ததன் அடிப்படையில் தற்போது பிரபலமாக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் சீக்கிரட்டைப் போட்டு உடைத்து பப்ளிசிட்டி தேடி வருகிறார்.