பிக்பாஸ் பட்டத்தை தட்டி தூக்க போவது இவர்தான்.. ஓப்பனாக பேசிய மகேஸ்வரி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சுவாரஸ்யத்தை கூட்டம் வகையில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதிலும் இந்த வாரம் நடைபெற்ற ராஜா ராணி டாஸ்க் பயங்கர ரணகளமாக இருந்தது.

இதுவரை நடந்த சீசன்களில் ஒரு சிலர் தங்களுடைய விளையாட்டை குழுவாகவும், தனியாகவும் விளையாடி வந்தனர். ஆனால் இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய விளையாட்டை தங்களுக்கு என ஒரு தனி யுக்தியை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.

Also read: வரம்பு மீறிய ராபர்ட் மாஸ்டர்.. வைல்ட் கார்டு என்ட்ரியில் இறங்கப் போகும் தரமான போட்டியாளர்

அதனாலேயே நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு ஆர்வம் கூடி இருக்கிறது. இந்நிலையில் இந்த பிக் பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என்று போட்டியாளரான மகேஸ்வரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய நடவடிக்கைகளால் சில வெறுப்புகளை சம்பாதித்த மகேஸ்வரி கடந்த வாரம் குறைந்த ஓட்டுகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது சோசியல் மீடியா சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் அவர் இந்த நிகழ்ச்சியில் கடினமான போட்டியாளர் யார் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று பிரபலமாக இருக்கும் விக்ரமன் தான் இந்த பிக் பாஸ் சீசன் பட்டத்தை வெல்வார் என்று மகேஸ்வரி கூறியிருக்கிறார்.

Also read: ரத்தம் வராமல் வார்த்தைகளால் அடிக்க போகும் கமல்.. ரணகளமாகும் பிக் பாஸ் வீடு

ஆரம்பத்தில் அவ்வளவாக கவனிக்கப்படாமல் இருந்த விக்ரமன் போக போக தன்னுடைய நல்ல குணத்தினால் அனைவரையும் கவர்ந்தார். அது மட்டுமல்லாமல் ஒரு பிரச்சனையை சரியான விதத்தில் பார்ப்பது, அதற்கான ஆலோசனை கூறுவது என்று இவர் இப்போது ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அதனாலேயே இவர் நாமினேஷனிற்கு வந்தால் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு விடுகிறார்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இவரை சிலர் சொந்த விஷயங்களை மனதில் வைத்து டார்கெட் செய்து வருகின்றனர். அதை கமல் கூட ஒருமுறை கூறி விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது மகேஸ்வரியும் இப்படி கூறியிருப்பது விக்ரமன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அந்த வகையில் பலரும் எதிர்பார்த்தபடி விக்ரமன் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: ரட்சிதா காதலை பிரிக்க மனமில்லாத பிக் பாஸ்.. இந்த வாரம் வெளியேற போகும் டம்மி போட்டியாளர்