Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையை மொத்தமாய் புரட்டி போடும் அளவிற்கு அவளுடைய பிரச்சனையில் தலையிட இருக்கிறார்.
இந்த வாரத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது எப்படியாவது அன்புவுக்கு தெரிந்து விடும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். ஆனால் ஆனந்தி, அன்புவே தன்னை வெறுக்கும் அளவுக்கு அவனிடம் இனி நம்முடைய திருமணம் நடக்காது என முகத்தில் அடித்த மாதிரி பேசி விடுகிறாள்.
அன்பு எடுக்க போகும் முடிவு!
இது அன்பு மற்றும் மற்றும் மகேஷ் இருவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த கர்ப்பத்தினால் கடைசி வரை தனியாக வாழ நீ முடிவெடுத்து இருக்கிறாயா என ஆனந்தி இடம் அவளுடைய தோழிகள் கடிந்து கொள்கிறார்கள்.
இந்த நேரத்தில் அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு வார்டன் மனோன்மணி ஆனந்தியின் அறைக்கு வருவது போல் காட்டப்படுகிறது. குழந்தை என்ற ஒரு காரணத்திற்காக ஆனந்தி தனித்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார் வார்டன்.
தன்னை போல இன்னொரு பெண் உருவாகி விடக்கூடாது என்று எப்போதுமே நினைக்கக் கூடியவர். இதனால் இந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து மகேஷ் உடன் ஆனந்தியை சேர்த்து வைப்பது தான் வார்டன் அடுத்து எடுக்கப் போகும் முடிவு. இதுக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை இனி வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.