Ethir Neechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் யாரும் கணிக்க முடியாத திரைக்கதை தான். அதுமட்டுமல்லாமல் சரியான கதாபாத்திரத்திற்கான நடிகர், நடிகைகளை இயக்குனர் கனகச்சிதமாக தேர்வு செய்திருக்கிறார். அந்த வகையில் இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி ட்விஸ்ட் ஒன்றை அரங்கேறி இருக்கிறது.
அதாவது ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்ற அதிர்ச்சி தரும் தகவல் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதுவும் ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் உரையாடல் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. இதனால் அடுத்து என்ன திருப்பம் வரும் என்ற எதிர்பார்ப்பில் தான் எதிர்நீச்சல் தொடர் சென்று கொண்டிருக்கிறது.
40℅ சொத்துக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குணசேகரன் குடும்பம் குழம்பி நிற்கிறது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜனனியின் கணவர் சக்தி திடீரென படுத்த படுக்கையாக முடங்கிப் போகிறார். மேலும் இதனால் உடைந்து போன ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை அழைத்து வருகிறார்.
அப்போதுதான் சக்திக்கு அம்மை போட்டிருக்கிற விஷயம் தெரிய வருகிறது. இதன் மூலம் ஜனனி தனியாக இனி சக்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள இருக்கிறார். இதுவரை நண்பர்களாக தான் ஜனனி மற்றும் சக்தி இருவரும் பழகி வருகிறார்கள். இந்நிலையில் ஜனனி, சக்தி மீது காட்டும் அக்கறை இவர்களை கணவன் மனைவியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் ஈஸ்வரி மற்றும் ரேணுகா தங்களது தனி தொழிலை தொடங்கியுள்ளார்கள். இப்போது சமையலில் ஆர்வம் உள்ள நந்தினிக்கு கேட்டரிங் தொழிலுக்கான லைசன்ஸை ஜனனி வாங்கி விட்டார். அதுவும் நந்தினியின் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாக ஜனனி இந்த லைசன்ஸை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.
ஆரம்பத்தில் அடுத்தடுத்த கஷ்டங்களை சந்தித்து வந்த எதிர்நீச்சல் மருமகள்கள் இப்போதுதான் தண்ணீரில் எதிர்நீச்சல் போடுவது போல தனது கனவுகளை சாதித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சக்திக்கு இவ்வாறு நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பது போல இதிலும் சுவாரஸ்யமான விஷயம் உள்ளடக்கி இருக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.