Ethirneechal Marimuthu: சீரியல் என்றாலே பெண்களுக்காக எழுதப்பட்டது, பெண்களை மையப்படுத்தி தான் அந்த கதை இருக்கும், சீரியல் பார்ப்பவர்களும் அந்த கதாநாயகிகளை தான் பெரிதாக பேசுவார்கள் என்ற ஒட்டுமொத்த சீரியல் மீதான பார்வையையும் மாற்றியது எதிர்நீச்சல் தான். ஆதி குணசேகரன் என்ற ஒரு ஆண் கேரக்டருக்காக தான் நிறைய பேர் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தார்கள்.
வெள்ளை வேட்டி சட்டையுடன், நெற்றியில் குங்கும பொட்டு மற்றும் விபூதியை பூசிக்கொண்டு இந்தம்மா ஏய் என இவர் மிரட்டும் தொனி சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் சென்சேஷனல் ஆனது. ஒரு சீரியலில் வில்லனை பொதுமக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அது எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் ஆகத்தான் இருக்க முடியும்.
இப்படி ஒரு சேனலின் மொத்த டிஆர்பிக்கும் காரணமாக இருந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இன்று தன்னுடைய 57வது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கிறார். இவருடைய இந்த மரணம் ஒட்டுமொத்த சினிமா உலகையும், பொது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பலரும் இவருக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா மற்றும் சீரியல்களில் ஒரு நடிகர் அல்லது நடிகை இறப்பது போல் நடித்து அதில் இருந்து ஒரு சில நாட்களிலேயே உண்மையிலேயே இறந்து விட்டால் அந்த காட்சியில் அவர்கள் நடித்தது பெரிதாக பேசப்படும். அதுதான் காரணமாக இருக்க கூடும் என்று கூட சொல்வார்கள். அப்படித்தான் எதிர்நீச்சல் இயக்குனர், மாரிமுத்துவின் மரணத்தை முன்பே கணித்தது போல் ஒரு காட்சியை வைத்திருக்கிறார்.
சொத்துக்களை இழந்து பித்து பிடித்தது போல் இருக்கும் ஆதி குணசேகரன், தன்னுடைய தம்பி கதிரிடம் தனக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவது போலவும், அந்த வலி வந்து எனக்கு ஏதோ ஒரு எச்சரிக்கை கொடுக்கிறது, ஏதோ ஒரு விஷயம் தப்பாக நடக்க போகிறது என சொல்வது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்போது உண்மையிலேயே மாரிமுத்துவின் மரணம் மாரடைப்பால் தான் ஏற்பட்டு இருக்கிறது. ஏதோ கெட்டது நடப்பது போல் எனக்குத் தோன்றுகிறது என்று சொன்ன ஆதி குணசேகரனின் வசனத்திற்கு ஏற்ப, எதிர்ப்பாராத விதமாக மாரிமுத்து உயிரிழந்து விட்டார்.