ஒத்த கைரேகையால் மொத்தத்தையும் காலி செய்த ஜீவானந்தம்.. ஒன்னும் புரியாமல் நிற்கதியான குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இதுவரை எல்லோரையும் கஷ்டப்படுத்தும் போது கோபமாக இருந்தது. அதே நேரத்தில் தற்போது கஷ்டப்படும் போது பார்க்கவே பாவமாகவும் இருக்கிறது. இந்த சீரியலில் தான் முதன்முதலாக வில்லன் கஷ்டப்படும் போது பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆனால் குணசேகரனை விட ஜீவானந்தம் தற்போது அராஜகம் செய்வது போல் இருக்கிறது. அதாவது குணசேகரன் மிரட்டி அந்த இடத்தை வாங்கி இருந்தாலும் அதற்கான பணத்தை கொடுத்து தான் வாங்கி இருக்கிறார். ஆனால் ஜீவானந்தமோ எந்தவித நஷ்ட ஈடு கொடுக்காமல், அப்பத்தாவின் கைரேகையை வாங்கிவிட்டு இப்படி சொத்தை அபகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல, என்பது போல் குணசேகரன் ஜீவானந்தமும் இருக்கிறார்கள். குணசேகரன் இதுவரை தில்லாலங்கடி வேலையை பார்த்து, அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களை டார்ச்சர் செய்ததற்கு மொத்தமாக செய்துவிட்டார் ஜீவானந்தம். ஒத்த கைரேகையால் மொத்தத்தையும் பிடுங்கிவிட்டார்.

அதோடு இல்லாமல் குணசேகரனை அசிங்கப்படுத்தி ஆட்களை வைத்து வெளியில் தூக்கி எறிந்து விட்டார். இதை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியாத குணசேகரன் கண்ணீர் கம்பளமாய் நிலை குலைந்து போய் நெற்கதியாக நிற்கிறார். இதனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று ஒன்றும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

அடுத்தபடியாக ஜனனி, ஜீவானந்தத்திடம் போய் நியாயம் கேட்கப் போகிறார். அதற்கு ஜீவானந்தம் படித்த முட்டாளாக குணசேகரன் வீட்டில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து விட்டு, என்னிடம் வந்து நியாயம் கேட்கிறாய் . இதுதான் நீ படித்த படிப்புக்கு கொடுக்கிற மரியாதையா என்று ஜனனியின் வாயை அடைக்கிற அளவிற்கு மடக்கி விடுகிறார். இதனால் தொடர்ந்து ஜனனியால் எதுவுமே சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறார்.

அடுத்து குணசேகரன் மற்றும் ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது தான் விறுவிறுப்பாக இருக்கப் போகிறது. இது எதுவுமே தெரியாமல் வீட்டில் படித்த முட்டாள்களாக இருக்கும் நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஆதிரை இவர்கள் அனைவரும் புலம்பிக்கொண்டு குணசேகரனை தாறுமாறாக பேசுகிறார்கள். ஆனால் கரிகாலன் லூசுத்தனமாக இருந்தாலும் அவருடைய பேச்சும் நடவடிக்கையும் தெளிவாகத்தான் இருக்கிறது.