Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலின் பிரமோ எப்போது வரப்போகிறது என்று ரொம்பவே ஆவலாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கிற அளவிற்கு பிரமோ வெளிவந்திருக்கிறது. அதாவது குணசேகரனின் கொட்டத்தை அடக்குவதற்கு சரியான ஆளாக ஜீவானந்தம் வந்திருக்கிறார்.
குணசேகரன் மற்றும் ஜீவானந்தம் சந்திக்கும் தருணத்திற்காக ரொம்ப நாட்களாக காத்துக் கொண்டிருந்தோம். அந்த வகையில் குணசேகரன் இத்தனை நாளாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த ஆணவத்தை மொத்தமாக அடித்து துவசம் பண்ணும் அளவிற்கு ஜீவானந்தம் நல்ல பிளான் பண்ணி ஸ்கெட்ச் போட்டு விட்டார்.
அதாவது எங்கே கை வைத்தால் குணசேகரனுக்கு வலிக்கும் என்று நன்றாகவே தெரிந்து, அவருடைய ஆசையான 40% சொத்தை அபகரித்து விட்டார். இதை தெரிந்து குணசேகரன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வந்தார். ஆனால் கடைசியில் இவருடைய ஜம்பவம் ஜீவானந்தம் முன்னாடி எடுபடாமல் போய்விட்டது.
அவருடைய அனைத்து சொத்தில் 75% ஷேர் ஜீவானந்தத்திற்கு சொந்தம் என்று முடிவாகிவிட்டது. இதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது, யாருமே எதிர்பார்க்காத படி கௌதம் வேற லெவலில் என்டரி கொடுத்தார். இது ஜனனிக்கு மிகப்பெரிய ஷாக் ஆகி, கௌதம் நீ எப்படி இங்கே என்று கேள்வி கேட்கிறார்.
ஆனால் அதற்கெல்லாம் அசராத கௌதம் முழுக்க முழுக்க ஜீவானந்தம் பக்கத்தில் நின்று இவர் பங்குக்கு குணசேகரனை மடக்கி விட்டார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத குணசேகரன் கொந்தளித்தார். ஆனால் ஜீவானந்தம், கண் அசைத்த நேரத்தில் குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி வெளியே எறிந்து விடுகிறார்.
இதை பார்ப்பதற்கு எப்படி இருந்த குணசேகரா இப்படி ஆகிவிட்டாய் என்று பார்க்கப் பாவமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சிரிப்பை அடக்க முடியாத அளவிற்கு சந்தோசமாகவும் இருக்கிறது. ஆக மொத்தத்தில் குணசேகரனின் ஆட்டம் இதோடு முடியப்போகிறது. இதற்குப் பிறகு ஜனனி மற்றும் குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.