மறக்க முடியாத படி அமைந்த பிறந்தநாள்.. இதெல்லாம் தேவையா ஆண்டவரே.!

Actor Kamal: கமல் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் இது அவருக்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்து விட்டது. பொதுவாக இந்த நாளில் அவருக்கான வாழ்த்துக்களும் ஆசிகளும் சோசியல் மீடியாவில் நிறைந்து கிடக்கும். ஆனால் இன்று அவருக்கு எதிரான கருத்துகள் தான் கிளம்பி கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸில் அவர் கொடுத்த தீர்ப்பு தான். ஆனால் இது தன்னுடைய முடிவு கிடையாது வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் எடுத்த முடிவு என்று அவர் சொன்னாலும் இதை மக்கள் இப்போது ஏற்பதாக இல்லை. அந்த அளவுக்கு பிரதீப் விவகாரம் இப்போது ட்விட்டர் தளத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அவர் அதில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இன்று பிறந்தநாள் நாயகனான கமலையே ஓரங்கட்டி மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார் பிரதீப். அந்த அளவுக்கு அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்ப வேண்டும் என்ற ஆதரவு குரல்கள் எழுந்து வருகிறது. அது மட்டும் இன்றி கமல் செய்தது தவறு என்று பலரும் அவருக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

உண்மையில் இவ்வளவு கோபத்திற்கும் பின்னால் இருக்கும் ஒரே விஷயம் பிரதீப் பேசுவதற்கு எந்த வாய்ப்பையும் கமல் கொடுக்காதது தான். அது மட்டுமல்லாமல் குற்றத்தை சுமத்தியவர்களின் கையிலே தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. அவர்களின் முடிவை மட்டுமே வைத்து பிரதீப் வெளியேற்றப்பட்டது நிச்சயம் நியாயம் இல்லை.

அதிலும் ஆண்டவர் இது மக்கள் முடிவு என்று சேர்த்து சொன்னது தான் கொந்தளிக்க வைத்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் பிரதீப் வெளியேறுகிறார் என்றதுமே விஜய் டிவி ஆடியன்ஸ் கைதட்டுவது போல் காட்டியதும் அப்பட்டமான ஸ்கிரிப்ட் ஆக தெரிகிறது. இதையெல்லாம் தற்போது பதிவிட்டு வரும் ரசிகர்கள் கமலுக்கு எதிராக பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

எப்போதுமே பிக்பாஸ் வீட்டு பிரச்சனையை கமல் கையாளும் விதம் நிச்சயம் வியக்கத்தக்கதாக இருக்கும். ஆனால் இந்த முறை அவர் செய்தது அவருக்கே பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது கிளம்பும் எதிர்ப்புகளை பார்த்தால் இதெல்லாம் தேவையா ஆண்டவரே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →