குணசேகரனை நம்பி மோசம் போன கதிர்.. புருசனை நினைத்து கண்ணீர் வடிக்கும் நந்தினி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்த வகையில் வாரத்தில் ஏழு நாட்களும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் முரட்டு வில்லனாக வந்த வளவன், கதிருக்கு போன் பண்ணி அனைத்து விஷயங்களையும் கோபத்துடன் உளறுகிறார்.

ஆனால் கதிர் போனை அவருடைய வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் சக்தியை வைத்து விஷயங்களை கேட்டு விடுகிறார்கள். இதனால் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு முழுக்க முழுக்க காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்று தெரிந்த அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். இதில் அதிகமாக கண்ணீர் விட்டு துடித்து அழுகிறது நந்தினி தான்.

அதாவது இத்தனை நாள் கொடுமை காரணமாக இருந்த புருஷன் தற்போது ஒரு பெண்ணை கொலை செய்து கொலைகாரனாகவும் ஆகிவிட்டாரே. அவர் செய்த பாவங்கள் அனைத்தும் என்னுடைய பிள்ளையின் மீது தானே விழும். இனி என் மகளை எல்லோரும் கொலைகாரன் பிள்ளை தானே என்று சொல்வார்கள் என வருத்தத்தில் துடிக்கிறார்.

அத்துடன் ஈஸ்வரியும் தன் புருஷன் கொலைகாரனாக ஆகிவிட்டார் என்ற பயத்துடன் தவிக்கிறார். அதன் பின் ஜனனி இந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்தவுடன் போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்று சக்தியை கூப்பிடுகிறார். ஆனால் சக்தி கொஞ்சம் பொறுமையாக இரு எந்தவித ஆதாரமும் இல்லாமல் இறங்க முடியாது.

அப்படி செய்தால் என்னுடைய அண்ணன் அனைத்தையும் திசை திருப்பி விடுவார். அதனால் பொறுமையாக இரு என்று கூறுகிறார். மேலும் அப்பத்தா ஜீவானந்த உடன் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதனால் இன்னும் இரண்டு நாட்களில் எல்லாத்துக்கும் முடிவு தெரிந்து விடும் அதுவரை கொஞ்சம் அமைதியாக இரு என்று ஜனனியை சாந்தப்படுத்துகிறார்.

ஆனாலும் உண்மை தெரிந்த பிறகு ஜனனியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஜீவானந்தத்தின் மனைவி இறந்ததை நினைத்து கவலையுடன் இருக்கிறார். கூடிய விரைவில் குணசேகரன் மற்றும் கதிர் போலீஸிடம் சிக்கப் போகிறார்கள். ஆனால் இதில் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கதிரை பலிகாடாக ஆக்கப் போகிறார் குணசேகரன். கதிரும் அண்ணனை நம்பி மோசம் போகப் போகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →