கதிரின் மொத்த கிரிமினல் வேலையும் புட்டு புட்டு வைத்த ஜனனி.. கண்கலங்க வைத்த குணசேகரனின் வீடியோ

Ethirneechal Serial: இரவு 9.30 மணி ஆனாலே நம் கைகள் தானாகவே ரிமோட்டை எடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை ஆன் பண்ணி விட்டுரும். அந்த அளவிற்கு இந்த நாடகம் அனைவரது மனதிற்குள்ளும் புகுந்து விட்டது. அதற்கு முக்கிய பில்லர் ஆக இருந்ததே குணசேகரின் கேரக்டர் தான். தன்னுடைய எதார்த்தமான பேச்சை காட்டி நடிப்பதில் இவருக்கு இணை யாரும் கிடையாது.

அப்படிப்பட்ட இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டில் இருக்கும் பெண்களிடம் தோற்றுப் போய்க் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவரை விட பெரிய அளவில் முன்னுக்கு வரவேண்டும் என்று நினைக்கும் சக்திக்கு உறுதுணையாக ஜனனி இருந்து வருகிறார். அதனால் இவர்கள் தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக இவருடைய அம்மா நகைகளை கொடுத்தார்.

மீதமுள்ள தொகைக்கு பேங்கில் லோன் வாங்கி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விஷயத்தை அவருடைய அம்மாவிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கப் போகிறார். அப்பொழுது இதைக் கேட்ட குணசேகரன் யார் வீட்டில் வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க. இதெல்லாம் கேட்க மாட்டியா அம்மா, நீ என்ன உன் பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணாம அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிற என்று கேட்கிறார்.

போதாக்குறைக்கு என்கிட்ட கேக்காம நகையும் வேற கொடுத்திருக்க, உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க என்று சொல்கிறார். அதற்கு விசாலாட்சி உன் பணத்தை கொடுக்கிற மாதிரி இருந்தால் உன்னிடம் கேட்டிருப்பேன். இது என்னுடைய அம்மா எனக்காக கொடுத்தது அதை நான் கண்டிப்பாக சக்தி இடம் தான் கொடுப்பேன் என்று பதிலடி கொடுக்கிறார்.

பிறகு குணசேகரனுக்கு சப்போர்ட்டாக ஞானம் மற்றும் கதிர் சக்தியிடம் சண்டை இடுகிறார். அதற்கு சக்தி, ஞானத்தை பார்த்து சொகுசு வாழ்க்கைக்காக அண்ணன் கூட ஒட்டிக்கொண்டு இருக்கிற மாதிரி ஜென்மம் நான் கிடையாது என்று சொல்கிறார். உடனே கதிர் வழக்கம் போல் துள்ளிக் கொண்டு வருகிறார்.

அதற்கு சக்தி நீ பண்ணின எல்லா கிரிமினல் வேலையும் சொல்லட்டா என்று கேட்கிறார். உடனே குணசேகரன் அப்படி என்னடா அவன் பண்ணிட்டான் என்று கேட்க, அதற்கு ஜனனி அனைத்து தில்லுமுல்லு வேலையும் புட்டு புட்டு வைக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் குணசேகரன் மற்றும் கதிர் நிற்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இன்று இந்த நாடகத்தின் தூணாக இருக்கும் குணசேகரனின் இறப்பை ஈடு கட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறோம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →