எதிர்பாராத ஓபனிங் கொடுத்த கவின்.. முதல் நாள் வசூலில் பட்டையைக் கிளப்பிய டாடா

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற பல பிரபலங்கள் ஜொலித்துள்ளார்கள். அந்த வகையில் கவினும் இப்போது வெள்ளித்திரையில் எப்படியாவது தனக்கான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். லிப்ட் படத்திற்குப் பிறகு தற்போது டாடா என்ற படத்தில் கவின் நடித்துள்ளார்.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் டாடா படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்த வகையில் டாடா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விஜய்யின் பிகில் மற்றும் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டைனராக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா போன்ற பிரபலங்களும் நடித்திருந்தார்கள். முதல் நாள் என்பதால் கவினின் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குகளுக்கு வந்திருந்தனர்.

மேலும் டாடா படத்தை பார்த்த ரசிகர்கள் கவினுக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்படம் முதல் நாளில் 2 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் நாளே கவினின் படம் கோடிகளில் வசூல் செய்துள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற ரசிகர்கள் மத்தியிலும் டாடா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் டாடா படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் கவினுக்கு எதிர்ப்பாராத ஓபனிங் கொடுத்துள்ளது.

மேலும் வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் டாடா படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் மிக விரைவில் தயாரிப்பாளர் டாடா படத்தில் போட்ட பணத்தை எடுத்து விடலாம். அடுத்ததாக விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் ஊர்க்குருவி என்ற படத்தில் கவின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.