Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கதிரையும் குணசேகரனையும் காயப்படுத்தி அவர்களை ஆட்டிப் படைக்கும் விதமாக கிள்ளிவளவன் களம் இறங்கி இருக்கிறார். அதாவது ஜீவானந்தம் மனைவி இறப்பிற்கு காரணமானவர் குணசேகரன் மற்றும் கதிர். அதற்கு துருப்புச் சீட்டாக கிள்ளிவளவனை பயன்படுத்தினார்கள். ஆனால் காரியம் முடிந்ததும் அப்படியே கிள்ளி வளவனை கழட்டி விட்டார்கள்.
இதற்கிடையில் கிள்ளிவளவன் கூட கதிர் இருக்கும் பொழுது கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் மட்டம் தட்டி அவமானப்படுத்தி பேசி இருப்பார். அத்துடன் பேசின பணத்தையும் கொடுக்காத காரணத்தினால் கிள்ளிவளவன் முதலில் கதிரை அடித்து கை காலை ஒடித்தார். தற்போது குணசேகரனிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக தர்ஷினியை கடத்திட்டு போயிருக்கிறார்.
இனி தர்ஷினியை வைத்து பிளாக்மெயில் பண்ணி பணத்தை பிடுங்க போகிறார் கிள்ளிவளவன். அப்பா செஞ்ச பாவம் எல்லாம் பிள்ளைகள் தலையில் தான் விழும் என்று சொல்வார்கள். அதுபோல குணசேகரன் செய்த அட்டூழியத்திற்கு தர்ஷினியை கடத்திட்டார்கள். இனி இதை குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்கள் கண்டுபிடித்து வெளியே கொண்டு வரப் போகிறார்கள்.
இதற்கிடையில் எப்பொழுது தன்னுடைய கணவர் திருந்தி நம் மீது பாசத்தை காட்டுவார் என்று ஏங்கிக் கொண்டிருந்த நந்தினிக்கு கதிர் மொத்தமாக மாறி அன்பாக பேச ஆரம்பித்து விட்டார். அதுவும் இத்தனை நாளா முரடனாகவும் கொடூர புத்தியும் கொண்ட கதிர் தற்போது மொத்தமாக மாறி பிள்ளையின் பாசத்துக்கு ஏங்கும் தகப்பனாக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷினியை கூட்டிட்டு போற அந்த கார் நம்பரை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தர்ஷணியை எப்படியும் ஜனனி மற்றும் ஈஸ்வரி கூட்டிட்டு வந்திடுவார்கள். அதன் பிறகு கதிரின் இந்த மாற்றம் முழுமையாக நந்தினிக்கு கிடைக்கப் போகிறது. இதுவரை கதிரை வைத்து ஆட்டம் போட்ட குணசேகரன் தற்போது பள்ள புடுங்கன பாம்பாக இருக்க போகிறார்.
ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக மெய்யப்பன் குடும்பத்தினர் குணசேகரனிடம் ஒட்டி உறவாடுகிறார்கள். இனி இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒவ்வொருவருக்கும் டார்ச்சர் கொடுக்கப் போகிறார்கள். ஆனாலும் இதையெல்லாம் முறியடிக்கும் விதமாக பெண்களுக்கு சப்போர்ட்டாக கதிர், சக்தி மற்றும் ஞானம் மூவரும் சேர்ந்து பக்கபலமாக இருக்கப் போகிறார்கள்.