கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் பிடித்த நடிகர்.. விரட்டியடித்த சன் டிவி சீரியல் நடிகை

சன் டிவியில் அண்ணாமலை சீரியலில் ரேவதி கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அந்த நடிகை. அதன் பிறகு சன் டிவியில் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

சன் டிவியில் கேளடி கண்மணி, முந்தானை முடிச்சு, ஆனந்தம், மரகத வீனை, பாசமலர், கல்யாண பரிசு என பல தொடர்களில் நடித்தவர் தான் கிருத்திகா. இதைத் தொடர்ந்து விஜய் டிவியிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி தொடரிலும் நடித்து இருந்தார்.

கிருத்திகா மிகவும் குண்டாக இருந்தார். தற்போது டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக உள்ளார். கிருத்திகா நல்ல உயரமாகவும், திடகாத்திரமாகவும் இருப்பதால் பெரும்பாலும் இவருக்கு நெகட்டிவ் கேரக்டர் கொடுக்கப்படுகிறது.

கிருத்திகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். கிருத்திகா சில வருடங்கள் முன்பு அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார்.

கிருத்திகா தற்போது கணவனை பிரிந்து தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ப்ளீஸ் என்று கேட்டிருந்தார். அதற்கு கிருத்திகா தன் மகனுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இது என்னுடைய மகன் ப்ரோ என பதில் அளித்திருந்தார்.

தற்போது அதேபோல் கிருத்திகா உடன் நடிக்கும் சக நடிகர் கிருத்திகாவை திருமணம் செய்து கொள் கேட்டுள்ளார். அதற்கு கிருத்திகா தனக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான் ஓடிப் போயிடு என அவரை விரட்டிவிட்டாராம். கிருத்திகாவை போல் தனியாக வாழும் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.