சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்தவகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.
இதில் வழக்கம் போல் சன் டிவி சீரியல்கள் தான் மாஸ் காட்டியுள்ளது. முதலிடம் அதிரடி காதல் கதைக்களத்தை கொண்ட கயல் சீரியலுக்கும், 2-வது இடம் அண்ணன் தங்கை பாசத்தை அழகாக வெளிப்படுத்தும் வானத்தைப் போல சீரியலுக்கும் கிடைத்துள்ளது.
3-வது இடம் தன்னை ஒதுக்கிய கணவருக்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும் மனைவியின் போராட்டத்தை காண்பிக்கும் சுந்தரி சீரியலுக்கும், 4-வது இடம் இரட்டை வேடத்தில் சீரியலில் பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருக்கும் ரோஜாவிற்கும் கிடைத்துள்ளது.
4-வது இடம் அப்பாவின் பாசத்தை கணவரிடம் அனுபவிக்கும் மகளின் கதையான கண்ணான கண்ணே சீரியலுக்கும், 5-வது இடம் இந்த காலத்தில் பெண்ணடிமைத்தனம் இருந்தால் அதை பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை காண்பிக்கும் எதிர்நீச்சல் கிடைத்துள்ளது.
இப்படி தொடர்ந்து 6 இடத்தை தன் வசப்படுத்திய சன்டிவி ஏழாவது இடத்தை தான் தன்னுடன் மல்லுக்கட்டிய விஜய் டிவிக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. பேரப்பிள்ளை எடுக்கிற வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனைவியின் கதையான பாக்கியலட்சுமி சீரியலுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.
8-வது இடம் சன்டிவியின் புத்தம்புது சீரியலான ஆனந்த ராகம் சீரியல் பெற்றுள்ளது.9-வது இடம் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலுக்கும், 10-வது இடம் 4 அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை காண்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ளது.