டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 6 நியூஸ் சேனல்ஸ்..  எல்லா பக்கமும் தண்ணி காட்டும் ஒரே சேனல் 

Top 6 News Channels TRP Rating List: எப்போதுமே சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தான் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக்கும். ஆனால் இந்த முறை எல்லா பக்கமும் தண்ணிய காட்டியே செய்தி சேனல்கள் டிஆர்பி-யில் தெறிக்க விட்டிருக்கின்றனர். இதில் டாப் 6 இடத்தைப் பிடித்த நியூஸ் சேனல்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்வதால், மழை நிலவரத்தையும், கொட்டுகிற மழையால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்பதை தினமும் பார்த்தே இப்போது செய்தி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங் எகிறுகிறது.

இதில் 6-வது இடத்தில் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ சேனல் பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ‘புதிய தலைமுறை’ 5-வது இடத்தில் இருக்கிறது. 4-வது இடம் சத்தியம் நியூஸ் சேனலுக்கு கிடைத்திருக்கிறது. 3-வது இடத்தில் ‘நியூஸ் தமிழ் 24×7’ சேனல் இருக்கிறது. முதல் இரண்டு இடத்தில் தான் கடும் போட்டியை ஏற்பட்டிருக்கிறது.

டாப் நியூஸ் சேனல்ஸ்

வெவ்வேறு வாய்ஸ் மாடுலேஷனில் செய்திகளை வாசித்த ‘பாலிமர் நியூஸ்’, டிஆர்பி-யில் 2ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் ‘சன் நியூஸ்’ பிடித்துள்ளது. எங்கெங்கெல்லாம் மழை பெய்கிறது என்பதை இப்போது இந்த செய்தி சேனல்கள் எல்லாம் துல்லியமாக காட்டுவதில் மும்முரம் காட்டுகின்றனர்.

நாலா பக்கமும் தண்ணியை காட்டியே டிஆர்பி-யில் சன் நியூஸ் டிஆர்பி-யில் முதல் இடத்தைப் பெற்றுவிட்டது. சீரியலில் தான் சன் டிவி டாப் இடத்தை ஆக்கிரமிக்கிறது என்றால், இப்போது செய்தி சேனல்களிலும் சன் நெட்வொர்க் தான் டாப் இடத்தை பிடித்து தண்ணி காட்டிவிட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →