சிங்கப்பெண்ணில் தில்லைநாதனால் வெளிச்சத்திற்கும் வரும் உண்மை.. உறைந்து போகும் அன்பு, ஆனந்தி, மகேஷ், மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன பெண்ணை சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க ஆனந்தி மகேஷின் துணையைத் தேடுகிறாள்.

அதே நேரத்தில் ஆனந்தி தன்னை விட்டு விலக என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் அன்பு வேலுவிடம் புலம்புகிறான்.

இந்த நேரத்தில் தான் ஆனந்தி அன்புவே தன்னை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு என்ன செய்யலாம் என காத்துக் கொண்டிருக்கிறாள்.

வெளிச்சத்திற்கும் வரும் உண்மை

தவளை தன் வாயால் கெடும் என்பது போல் உண்மை தெரிந்த மித்ரா அவளின் நடத்தையாலே மொத்த விஷயத்தையும் காட்டிக் கொடுக்க இருப்பது தான் அடுத்த கட்ட கதை நகர்வு.

மித்ரா ஏற்கனவே பின்தொடர்ந்து வருவதை இரண்டு, மூன்று தடவை ஆனந்தி கவனித்து விட்டாள். அதே நேரத்தில் பார்ட்டி நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ மகேஷின் மடிக்கணினியில் இருக்கும் என்பதால் அதைத் தேடி அழித்துவிட முயற்சிக்கிறாள்.

இந்த நேரத்தில் மித்ரா தில்லைநாதனிடம் சிக்கிக் கொள்வது போல் காட்டப்படுகிறது. என்னதான் மித்ரா சொல்வதை தில்லைநாதன் நம்புவதாக இருந்தாலும் அவள் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது.

இதைத் தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க தில்லைநாதன் முயற்சி எடுக்க இருக்கிறார்.

அதே நேரத்தில் மகேஷ் தானாக முன்வந்து அந்த வீடியோவை பார்த்து ஆனந்திக்கு நேர்ந்த கொடுமைக்கு தான்தான் காரணம் என கண்டுபிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.