Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. கோகிலா திருமணத்தின் போது அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டுவானா என ஒட்டுமொத்த நேயர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் இயக்குனர் பெண் அழைப்பு, நலங்கு, வரவேற்பு என அடிமேல் அடியாய் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய எபிசோடில் மாப்பிள்ளை சொந்தக்கார பெண் ஒருவர் தன்னுடைய வைர நெக்லஸ் தொலைந்து விட்டதாக பிரச்சனை பண்ணுகிறார்.
சிக்கலில் மாட்டிவிடும் மகேஷ்
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் பெரிய பிரச்சனை செய்கிறார்கள். இதை சமாளிக்க முடியாமல் மகேஷ் நெக்லஸ் கிடைக்கவில்லை என்றால் அதற்கான காசை நானே தருகிறேன் என ஒப்புக்கொள்கிறான்.
ஏற்கனவே மகேஷின் நல்ல மனசு நோகடிப்பதாக அன்பு மற்றும் ஆனந்தி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவர் மற்றும் ஆனந்தியின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெற்ற உணர்ச்சியில் தள்ள மகேஷ் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் வைர நெக்லஸை பறி கொடுத்த தம்பதி ஏற்கனவே சொந்த வீட்டில் திருடியவர்கள் எல்லாம் உங்கள் குடும்பத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள் என வேலுவை குறிவைத்து பேசுகிறார்கள்.
இதனால் அழகப்பன் ரொம்பவே மனம் உடைந்து போகிறார். கோகிலாவின் திருமணத்தை நடத்தி முடிக்க ஆனந்தியின் குடும்பம் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறது என்பதை அன்புவின் அம்மா லலிதா நேரடியாக பார்க்கிறார். இதனால் கல்யாண வீட்டில் ஆனந்தியை பெண் கேட்டு பிரச்சினை பண்ண முடிவை கண்டிப்பாக அவர் கைவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.