Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக எபிசோடுகள் தொடங்கியதிலிருந்து ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான்.
போதாத குறைக்கு ஆனந்தி தடுமாறி கழிவு நீர் தொட்டியில் விழ அவளை மகேஷ் காப்பாற்றினான். அது மட்டும் இல்லாமல் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் ஆனந்தியின் கர்ப்பத்தை பற்றி தெரிந்து கொள்கிறான்.
ஏற்கனவே அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது அவனுக்கு பெரிய உச்சகட்ட கோபத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் மகேசை நிலைகுலைய செய்கிறது.
அன்புவுக்கு வந்த சோதனை!
டாக்டர் ஆனந்தியிடம் உன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சொல்லிவிடு. இல்லை என்றால் உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று சொல்கிறார்.
ஆனால் ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தனக்கு தெரியாது என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.
ஆனால் மகேஷ் திடீரென உள்ளே வந்து யார் காரணம் என எனக்கு தெரிந்து விட்டது என்று சொல்கிறான். இந்த ப்ரோமோவை பார்க்கும் போது மகேஷ் அன்பு மீது தான் சந்தேகப்படுகிறான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் குடோனில் தனியாக இருந்தது, மற்றும் அன்புவின் வீட்டில் ஆனந்தி தங்கி இருந்தது என எல்லாமே மகேஷின் சந்தேகத்திற்கு சாதகமாகிவிட்டது. இந்த விஷயத்தை மகேஷ் எப்படி கையாள போகிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.