மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியா, தோல்வியா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Maaveeran Collection Report: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் நேற்று ஆரவாரமாக வெளியானது. அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் போன்ற பலர் நடித்துள்ள இப்படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஃபேண்டஸி ஆக்சன் படமாக வெளிவந்துள்ள இதில் சிவகார்த்திகேயனின் வெரைட்டியான நடிப்பு நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதிலும் தொடை நடுங்கியாக இருக்கும் அவர் மாவீரனாக மாறுவதும், இது தொடர்பான காட்சிகளும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

ஒரு முக்கிய அரசியல் ரீதியான பிரச்சனையை இயக்குனர் காமெடி கலந்து கொடுத்திருந்த விதமும், திரை கதையும் நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் பாராட்டு மழையில் நனைந்து வரும் மாவீரன் படத்துக்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங்கும் கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் நேற்று முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வந்த நிலையில் அதற்கு அடுத்தடுத்த காட்சிகளும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் இருந்தது. விடுமுறை இல்லாத நாள் என்பதால் நைட் ஷோவில் தான் படத்திற்கான கூட்டம் அதிகரித்தது.

அந்த வரிசையில் மாவீரன் முதல் நாளிலேயே தமிழகத்தில் 7 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இந்திய அளவில் 9 கோடி ரூபாயை நெருங்கி விட்டது. உலக அளவில் 10 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வார இறுதி நாட்களில் இந்த வசூல் இன்னும் உயரும் என்று தெரிகிறது.

மேலும் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் முதல் நாளிலேயே 10 கோடி வரை வசூலித்து விட்டது. தற்போது விமர்சனங்களும் பாசிட்டிவாக இருப்பதால் இனி வரும் நாட்களில் மாவீரன் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.