Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆனந்திக்கு உறுதுணையாக காயத்ரி, ரெஜினா மற்றும் சௌந்தர்யா இருக்க அவளுடைய பிரச்சினைக்கு பெரிய தீர்வாக மகேஷ் சேர்ந்து இருக்கிறான்.
மகேஷ் கொடுத்த பென் டிரைவில் பார்ட்டி நடந்த வீடியோ இருப்பது பார்த்து ஆனந்திக்கு ஒரு பெரிய பிரச்சினை முடிந்து விட்டதாக தெரிகிறது.
விரட்டி பிடிக்கும் ஆனந்தி
அதனால் தான் அன்புவின் அம்மா கூப்பிட்ட பூஜைக்கு கூட போகாமல் அந்த வீடியோவை பார்க்கிறாள்.
அந்த வீடியோவில் கம்பெனியில் இதற்கு முன் வேலை செய்த நபர் தான் தனக்கு கூல்டிரிங்க்ஸில் ஏதோ கலந்து கொடுப்பது தெரிய வருகிறது.
அந்த நபரை கண்டுபிடித்தால் கண்டிப்பாக என்ன நடந்து இருக்கும் என்பது தெரியும் என நம்புகிறாள்.
இதனால் சௌந்தர்யா மூலமாக அந்த நபரை குறிப்பிட்ட இடத்திற்கு வர வைப்பது போல் இன்றைய ப்ரோமோ இருக்கிறது.
ஆனந்தி அடிதடியாக அவனிடம் சண்டை போட்டு உண்மையை வர வைக்கிறாள். ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் சிக்கிக் கொண்ட நபருக்கு மித்ரா தான் இதில் நேரடியாக தொடர்பு வைத்திருக்கிறாள் என்பது தெரியாது.
கண்டிப்பாக அவன் கருணாகரன் அல்லது அரவிந்தன் பெயரை சொல்லத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. இதைத்தொடர்ந்து கருணாகரனை ஆனந்தி அடித்து துவைத்து கேட்டாலும் உண்மை எதுவும் வெளியில் வராது.
இதற்கு காரணம் ஆனந்தி இருந்த ரூமுக்கு மகேஷ் தான் போனது என்பது மித்ராவுக்கு மட்டும்தான் தெரியும். கருணாகரனுக்கு தெரிந்ததெல்லாம் ஆனந்தி மற்றும் அரவிந்த் ஒரே அறையில் இருப்பதை மகேஷ் பார்க்க வேண்டும் என்ற மித்ராவின் திட்டம் மட்டும் தான்.
இதனால் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும் கருணாகரன் அரவிந்த் பெயரை சொல்ல தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதனால் ஆனந்தியும் அரவிந்த் தான் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் என்று நினைக்கப் போகிறாள் . கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மித்ரா இதில் என்ன சடுகுடு ஆட்டம் ஆட போகிறாள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.