நியாயமில்லாத பிரதீப் எவிக்சன்.. ஆண்டவரின் லீலைகளை அவிழ்த்து விடும் நெட்டிசன்கள்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரை எந்த சீசன்களிலும் இல்லாத அளவுக்கு மிகவும் சர்ச்சையாகி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரதீப்பை பற்றி ஆரம்பம் முதலே நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அவருக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுக்க தொடங்கி இருந்தனர்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் நண்பனாக நுழைந்தபோதே பிரதீப் மிகவும் பிரபலமாகி இருந்தார். மேலும் கவின் என்ன யுக்தியை கையாண்டாரோ அதை தான் இப்போது பிரதீப்பும் பின்பற்றி வருகிறார். மேலும் நேற்றைய எபிசோடில் கமல் பிரதீப்பின் நடவடிக்கையில் கோபப்பட்டு அவருக்கு ரெட் கார்ட் கொடுத்திருந்தார்.

மேலும் வீட்டில் உள்ளவர்களின் விருப்பமும் கேட்டபோது பிரதீப்புக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சூழலில் இப்போது பிரதீப்புக்கு ஆதரவாகவும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இணையத்தில் அதிக செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரேகா, கமல் சர்ச்சை தான் இப்போது பூதாகரம் எடுத்திருக்கிறது.

Also Read : பிரதீப்பை வெளிய அனுப்பலனா, நா ஷோ விட்டு போயிடுவேன்.. விஜய் டிவியை எச்சரித்த கமல்

அதாவது பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரேகா. இவர் கமலுடன் இணைந்து புன்னகை மன்னன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரேகாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுலையை ஏற்படுத்து இருந்தாலும் இதில் இடம்பெற்ற ஒரு காட்சி அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதாவது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் மற்றும் ரேகா ஒரு மலையின் உச்சியில் இருந்து கீழே விழ முற்படுவார்கள். அப்போது ரேகாவின் அனுமதி இன்றி கமல் அவருக்கு முத்தம் கொடுத்து விடுவார். இதனால் ரேகா மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இந்த காட்சியை எடுக்கும்படி ரேகா இயக்குனர் பாலச்சந்தரிடம் கூறியிருந்தாராம்.

தனது அப்பா இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார் என எவ்வளவோ சொல்லியும், இது ஒரு காதலனின் வெளிப்பாடு தான், தப்பு இருக்காது என கூறிவிட்டாராம். ஆனாலும் படம் வெளியான பிறகு தனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததாக கூறி இருக்கிறார். அப்போது ரேகாவுக்கு 16 வயது தானாம். இவ்வாறு ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்த கமல் இப்போது பிரதீப்பை குற்றம் சொல்வது சரியா என நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

Also Read : ரெட் கார்ட் கொடுத்து வெளியே தள்ளிய ஆண்டவர்.. பிக்பாஸில் நடந்த அதிரடி திருப்பம்