ஜிப்பு போட மறந்ததெல்லாம் ஒரு குத்தமா.? கமலுடன் பிந்து மாதவி புகைப்படத்தை வறுத்தெடுக்கும் பிரதீப் ஆர்மி

Kamal-Bindu Madhavi: கடந்த சில நாட்களாகவே பிரதீப் ஆர்மி தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது. என்றைக்கு பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு அவமானப்பட்டு வெளியேறினாரோ அன்றிலிருந்தே சோசியல் மீடியா ஃபயராக இருக்கிறது. அதிலும் ஆண்டவரின் பெயர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது.

அதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு போட்டோ ட்விட்டர் தளத்தில் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நேற்று உலக நாயகனின் பிறந்த நாளை முன்னிட்டு பல பிரபலங்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்படித்தான் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான பிந்து மாதவியும் ஒரு போட்டோவை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

ஆனால் அதுதான் இப்போது சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்காகவே காத்திருந்த பிரதீப் ஆர்மி இப்போது ஆண்டவரை வறுத்து எடுத்து வருகின்றனர். இவ்ளோ பில்டப் கொடுக்குற அளவுக்கு அந்த போட்டோல அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தவர்கள் எல்லாம் இப்போது ஜெர்க் ஆகி போயிருக்கின்றனர்.

ஏனென்றால் அதில் பிந்து மாதவியை அணைத்தபடி இருக்கும் ஆண்டவர் ஜிப்பு போட மறந்துவிட்டார். இதை தான் பிரதீப் ஆர்மியினர் இப்போது பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அது மட்டும் இன்றி பிந்து மாதவி இப்படி ஒரு போட்டோவை ஏன் வெளியிட வேண்டும் என்ற கருத்துக்களும் இப்போது எழுந்து வருகிறது.

ஏற்கனவே கமலின் பெயர் ஒரு வழியாகி கொண்டிருக்கிறது. இதில் இந்த போட்டோவும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. ஆனாலும் ஒரு சில குசும்புக்கார நெட்டிசன்கள் ஜிப்பு போடாததெல்லாம் ஒரு குத்தமா, ஏன்பா இப்படி கலாய்க்கிறீங்க என்று நக்கல் அடித்து வருகின்றனர்.

இப்படி கெட்ட நேரம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்த நிலையாக இருக்கிறது ஆண்டவரின் கதை. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்டும் நடந்துள்ளது. அதாவது பிந்து மாதவி பதிவிட்ட இந்த போட்டோவை தற்போது நீக்கியுள்ளார். இதையும் கவனித்த ரசிகர்கள் அதற்கும் சேர்த்து மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

ஜிப்பு போட மறந்த ஆண்டவர்

kamal-bindu madhavi
kamal-bindu madhavi